மாநில செய்திகள்

நாகர்கோவில், நெல்லையில் இன்றும், நாளையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் + "||" + Chief Minister Edappadi Palanisamy will visit Nagercoil and Nellai today and tomorrow

நாகர்கோவில், நெல்லையில் இன்றும், நாளையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம்

நாகர்கோவில், நெல்லையில் இன்றும், நாளையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம்
நாகர்கோவில், நெல்லையில் இன்றும், நாளையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
சென்னை, 

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (22-ந்தேதி) பிற்பகல் 12.10 மணிக்கு முகாம் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு சென்னை விமான நிலையத்திற்கு செல்கிறார். அங்கிருந்து புறப்பட்டு தூத்துக்குடி விமான நிலையத்தை பிற்பகல் 2.45 மணிக்கு சென்றடைகிறார்.

அங்கிருந்து சாலை மார்க்கமாக புறப்பட்டு நாகர்கோவில் ஆய்வு மாளிகைக்கு செல்கிறார். அங்கு ஓய்வெடுக்கும் அவர் மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு அருமனையில் கிறிஸ்துமஸ் விழா நடக்கும் இடத்தை மாலை 6.30 மணிக்கு சென்றடைகிறார்.

விழா முடிந்ததும் அங்கிருந்து புறப்பட்டு நெல்லைக்கு செல்கிறார். இன்றிரவு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நெல்லையில் தங்குகிறார். நாளை (23-ந்தேதி) காலை 9.15 மணிக்கு புறப்பட்டு சங்கரன்கோவிலுக்கு காலை 10 மணிக்கு செல்கிறார். அங்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமியின் குடும்ப விழாவில் பங்கேற்கிறார்.

பின்னர் பிற்பகல் ஒரு மணிக்கு தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வரும் அவர், அங்கிருந்து விமான மூலம் புறப்பட்டு சென்னை விமான நிலையத்தை பிற்பகல் 3.20 மணிக்கு வந்தடைகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. குமரி, நெல்லை மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2. தமிழகத்தில் உள்மாவட்டங்களில் இன்றும், நாளையும் வெயில் அதிகரிக்கும் - வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தி்ல உள்மாவட்டங்களில் இன்றும், நாளையும் வெயில் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
3. கேரளாவில் இன்றும், நாளையும் 2.5 லட்சம் கொரோனா பரிசோதனைகள்: மாநில அரசு ஏற்பாடு
கேரளாவில் இன்றும், நாளையும் 2.5 லட்சம் கொரோனா பரிசோதனைகள் செய்வதற்கு மாநில அரசு ஏற்பாடுகள் செய்துள்ளது.
4. "தமிழகத்தில் குமரி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும்" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் குமரி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
5. நெல்லை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேருக்கு கொரோனா தொற்று
நெல்லை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.