மாநில செய்திகள்

நடிகர் ரஜினிகாந்திடம் மு.க.அழகிரி தொலைபேசி மூலம் நலம் விசாரித்தார் + "||" + MK Alagiri inquired about actor Rajinikanth's health over the phone

நடிகர் ரஜினிகாந்திடம் மு.க.அழகிரி தொலைபேசி மூலம் நலம் விசாரித்தார்

நடிகர் ரஜினிகாந்திடம் மு.க.அழகிரி தொலைபேசி மூலம் நலம் விசாரித்தார்
நடிகர் ரஜினிகாந்திடம் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தொலைபேசி மூலம் நலம் விசாரித்தார்
சென்னை, 

கடந்த சில தினங்களுக்கு முன்பு 'அண்ணாத்த' படப்பிடிப்பில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. அப்போது ரஜினிக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது.

இதனைத்தொடர்ந்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் இன்று வெளியிட்ட அறிக்கையில், “நடிகர் ரஜினியின் உடலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவரது ரத்த அழுத்தத்தை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அவர் எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்பது குறித்து இன்று மாலை முடிவு எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஐதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்திடம் தொலைபேசியில் தொடர்பு கொண்ட முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உடல்நலம் குறித்து விசாரித்ததாகவும், 2 அல்லது 3 நாளில் சென்னை திரும்புவேன் என்று நடிகர் ரஜினிகாந்த் அவரிடம் கூறியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக புதிய கட்சி தொடங்குவது குறித்து ஆதரவாளர்களுடன் ஜனவரி 3 ஆம் தேதி ஆலோசனை நடத்திய பின்னர் அறிவிப்பு வெளியிடப்படும் என்று மு.க.அழகிரி தெரிவித்திருந்தார். 

தொடர்புடைய செய்திகள்

1. இசையமைப்பாளர் இளையராஜாவின் புதிய ஸ்டுடியோவை நடிகர் ரஜினிகாந்த் பார்வையிட்டார்
இளையராஜா அண்மையில் தொடங்கிய ஸ்டுடியோவுக்கு வந்த ரஜினிகாந்த்; ஸ்டுடியோவை சுற்றி பார்த்து, வியந்து கோவிலுக்குள் வந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது என பாராட்டியுள்ளார்.
2. நடிகர் ரஜினிகாந்தின் தார்மீக ஆதரவு அ.தி.மு.க.வுக்கு இருக்கும் - அமைச்சர் டி.ஜெயக்குமார் தகவல்
உடல்நிலையை கருத்தில் கொண்டு அரசியலுக்கு நடிகர் ரஜினிகாந்த் வராவிட்டாலும் அவருடைய தார்மீக ஆதரவு அ.தி.மு.க.வுக்கு என்றும் இருக்கும் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியுள்ளார்.
3. என்னை நம்பி என்னுடன் வருபவர்களை பலிகடா ஆக்க விரும்ப வில்லை; கட்சி தொடங்கவில்லை நடிகர் ரஜினிகாந்த் - பரபரப்பு அறிக்கை
கட்சி தொடங்கவில்லை ; அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன் ரஜினிகாந்த் பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.
4. மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த்
ஐதராபாத் அப்போலோ மருத்துவமனையில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
5. நடிகர் ரஜினிகாந்த் இன்று மாலை டிஸ்சார்ஜ் - அப்பலோ மருத்துவமனை அறிக்கை
நடிகர் ரஜினிகாந்த் இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்படவுள்ளதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.