மாநில செய்திகள்

குமரிக்கு இன்று தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு வருகை - சுரே‌‌ஷ்ராஜன் எம்.எல்.ஏ. தகவல் + "||" + DMK Election Report Preparation Committee Visits Kanyakumari today - Sureshrajan MLA Information

குமரிக்கு இன்று தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு வருகை - சுரே‌‌ஷ்ராஜன் எம்.எல்.ஏ. தகவல்

குமரிக்கு இன்று தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு வருகை - சுரே‌‌ஷ்ராஜன் எம்.எல்.ஏ. தகவல்
தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு இன்று குமரி மாவட்டத்திற்கு வர உள்ளதாக சுரே‌‌ஷ்ராஜன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில்,

தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு இன்று குமரி மாவட்டத்திற்கு வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சுரே‌‌ஷ்ராஜன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தி.மு.க. சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் ஒருங்கிணைப்பாளரும், தி.மு.க. பொருளாளருமான டி.ஆர்.பாலு எம்.பி. தலைமையில் எம்.பி.க்கள் திருச்சி சிவா, இளங்கோவன் உள்ளிட்டோர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) குமரி மாவட்டம் வருகிறார்கள். அவர்களுக்கு காலை 10.30 மணிக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது.

இந்த குழு மாலை 4 மணி முதல் 6 மணி வரை நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் கூடுகிறது. எனவே தேர்தல் அறிக்கையில் குமரி மாவட்டத்துக்கு கொண்டுவர வேண்டிய திட்டங்களையும், பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள பொது பிரச்சினைகள் குறித்தும், அதற்கான தீர்வுகள் குறித்தும் நேரில் வந்து தெரிவிக்கலாம். 

தேர்தல் அறிக்கை தொடர்பாக உள்ள மனுக்களை மட்டும் தான் அவர்கள் வாங்குவார்கள். மேலும் பொது நலச்சங்கம், வணிக அமைப்புகள், இளைஞர்கள், தொழிலாளர் அமைப்புகள், விவசாய அமைப்புகள், ஆசிரியர் சங்கம், தோழமை இயக்கத்தினர் மற்றும் பொதுமக்களின் நலன் காணும் அமைப்புகளும் நேரடியாக வந்து கூறலாம். எனவே அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. குமரி அருகே உருவானது காற்றழுத்த தாழ்வு நிலை: தென்மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
குமரி அருகே உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தென்மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2. குமரியில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை; கண்காணிப்பு பணியில் 1000 போலீசாரை ஈடுபடுத்த முடிவு
குமரி மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 1000 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த மாவட்ட காவல்துறை முடிவு செய்துள்ளது.
3. குமரி மாவட்டத்தில் 3 சட்டசபை தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடும்; ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. பேட்டி
3 சட்டசபை தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடும் என்று ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. கூறினார்.
4. குமரியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: கிறிஸ்தவ ஆலயங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை
குமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
5. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை குமரி வருகை கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்று உரையாற்றுகிறார்
அருமனையில் நடைபெற உள்ள கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை(செவ்வாய்க்கிழமை) குமரி மாவட்டம் வருகிறார். கிறிஸ்துமஸ் விழா மதநல்லிணக்க மாநாட்டில் அவர் பங்கேற்று உரையாற்றுகிறார்.