நாமக்கல் பகுதியில் வீடு வீடாக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் - வீடியோ + "||" + In the Namakkal area House to House First Minister Edappadi Palanisamy Campaign Video
நாமக்கல் பகுதியில் வீடு வீடாக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் - வீடியோ
நாமக்கல் மாவட்டம் முதலைப்பட்டி பகுதியில் வீடு வீடாக சென்று முதலமைச்சர் பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார்.
நாமக்கல்
வெற்றிநடைபோடும் தமிழகம் என்னும் தலைப்பில் தமிழக முதலமைச்சரும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார். மாவட்ட எல்லையான ஆட்டையாம்பட்டி பிரிவு சாலையில் அதிமுகவினர் அளித்த வரவேற்பை ஏற்றுக் கொண்ட எடப்பாடி பழனிசாமி அங்கு உரையாற்றினார்.
இதைத்தொடர்ந்து நாமக்கல் சென்ற முதலமைச்சர் வழியில் திரண்டிருந்த மக்களிடம் வாக்கு சேகரித்தார்.
பின்னர் நாமக்கல்லில் ஆஞ்சநேயர் கோவிலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழிபட்டார். அவருக்கு பூர்ண கும்ப மரியாதை கொடுக்கப்பட்டு, பரிவட்டம் கட்டப்பட்டது.
வழிபாட்டுக்குப் பின்னர் கோவில் வளாகத்தில் சாலையோர வியாபாரிகளுடன் கலந்துரையாடி, அவர்களின் குறைகளை கேட்டு மனுக்களை பெற்றார்.
தொடர்ந்து அங்குள்ள முதலைப்பட்டி பட்டி அருந்ததியர் அண்ணாநகர் காலனியில் வீடு வீடாக சென்று பிரசாத்தில் ஈடுபட்டார். அங்கு தொண்டர் ஒருவர் வீட்டில் அமர்ந்து தேநீர் அருந்தினார்.