ரஜினிகாந்த் எதிர்காலத்தில் ஆதரவு கொடுத்தால் அது அதிமுகவுக்குத்தான் இருக்கும் - அமைச்சர் ஜெயக்குமார் + "||" + If Rajinikanth supports in the future, it will be for the AIADMK - Minister Jayakumar
ரஜினிகாந்த் எதிர்காலத்தில் ஆதரவு கொடுத்தால் அது அதிமுகவுக்குத்தான் இருக்கும் - அமைச்சர் ஜெயக்குமார்
ரஜினிகாந்த் எதிர்காலத்தில் ஆதரவு கொடுத்தால் அது அதிமுகவுக்குத்தான் இருக்கும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
சென்னை,
சென்னை சைதாப்பேட்டை மெட்ரோ ரயில் நிலைய வளாகத்தில் நடமாடும் டீக்கடையை அமைச்சர்கள் திரு.எம்.சி சம்பத் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-
நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய உடல் நிலை குறித்து கட்சி தொடங்கவில்லை என்று ஒரு அறிவிப்பை அறிவித்துள்ளார். உடல் நிலையை கருத்தில் கொண்டு அவர் முடிவெடுத்திருப்பதன் காரணமாக அதிமுக சார்பில் எந்த கருத்தும் கூற விரும்பவில்லை. அவர் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து என்றும் தமிழக மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும். மேலும், கலை உலகத்திற்கு பெரும் படைப்புகளை படைக்க வேண்டும் என்பதே எங்களின் நிலை.
ரஜினிகாந்த் எதிர்காலத்தில் ரஜினிகாந்த் ஆதரவு என்ற குரல் கொடுத்தால் அந்த ஆதரவினை மக்களுக்கு நல்லது செய்யும் அதிமுகவிற்கு மட்டும்தான் அவர் அளிப்பார். தேர்தலில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி என்பதை முதல்வர் தெளிவுபடுத்தியுள்ளார். இதனை கூட்டணியில் அங்கம் வகித்துள்ள அனைத்து கட்சிகளும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
முதலமைச்சருடன் நடிகர் விஜய் மறைமுகமாக சந்தித்ததில் எந்த உள்நோக்கமும் இல்லை. மாஸ்டர் திரைப்படம் வெளியாவது குறித்து பேச்சுக்கள் நடைபெற்றிருக்கலாம் இது தவிர்த்து வேறு எந்த உள்நோக்கமும் இல்லை.
தான் அரசியல் கட்சியை தொடங்கப் போவதில்லை என்றும், ரஜினி மக்கள் மன்றம் தொடர்ந்து செயல்படும் என்றும், மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்வேன் என்றும் தெரிவித்துள்ளார். இவரது திடீர் அறிவிப்பு, சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
ரஜினிகாந்தின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், அவருக்கு ரத்த அழுத்தம் தொடர்ந்து அதிகமாகவே இருப்பதாக அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்திருந்தது.