மாநில செய்திகள்

நண்பர் என்ற முறையில் ரஜினியிடம் ஆதரவு கேட்பேன் - கமல் + "||" + I will ask Rajinikanth for support as a friend - Kamal Haasan

நண்பர் என்ற முறையில் ரஜினியிடம் ஆதரவு கேட்பேன் - கமல்

நண்பர் என்ற முறையில் ரஜினியிடம் ஆதரவு கேட்பேன் - கமல்
நண்பர் என்ற முறையில் ரஜினிகாந்திடம் ஆதரவு கேட்பேன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை, 

சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்த ரஜினிகாந்த், உடல்நிலை ஒத்துழைக்காத நிலையில் அரசியல் களத்தில் இருந்து பின் வாங்கியுள்ளார். ஆனாலும் அரசியலுக்கு வராமலே, மக்களுக்கு என்ன செய்ய முடியுமோ அதை செய்வேன் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நண்பர் என்ற முறையில் ரஜினிகாந்திடம் ஆதரவு கேட்பேன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன், “ரஜினியின் முடிவு சற்று ஏமாற்றமாக இருந்தாலும், அவரது ஆரோக்கியம் எனக்கு முக்கியம். அவரது ரசிகர்கள் மனநிலைதான் எனக்கும். சென்னை சென்றதும் ரஜினியை சந்தித்து பேசுவேன். என் ரஜினி நலமுடன் இருக்க வேண்டும். எங்கிருந்தாலும் அவர் ஆரோக்யத்துடன் இருக்க வேண்டும். ரஜினி நலம் விரும்புபவர்களில் நானும் ஒருவன். நண்பர் என்பதால் தேர்தலில் ஆதரவு கோருவேன். ரஜினியின் முடிவு பாஜகவுக்கு ஏமாற்றமா என்ற யுகமான கேள்விக்கு நான் பதில் அளிக்க முடியாது. பா.ஜ.க ஆட்சிக்கு வரவேண்டும் என்று தமிழக மக்கள் விரும்பவில்லை. 

ஆன்மீகத்திற்கும் எனக்கும் விரோதம் கிடையாது. ஆன்மிகத்தை ஏற்றுக் கொள்ளுமாறு யாரும் என்னை நிர்ப்பந்திக்க முடியாது. பகுத்தறிவை ஏற்றுக் கொள்ளுமாறு நான் யாரையும் நிர்பந்திக்க முடியாது. திராவிடம் யாருக்கும் சொந்தமில்லை; அனைவருக்கும் சொந்தமானது. நான் நேர்மையான அரசியலில் ஈடுபடுவேன்” என்றார். 


தொடர்புடைய செய்திகள்

1. ‘அண்ணாத்த' படப்பிடிப்பு: ரஜினிகாந்த் புதிய முடிவு
சட்டசபை தேர்தல் முடிந்த பிறகே படப்பிடிப்பில் கலந்து கொள்ள ரஜினிகாந்த் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது
2. விமர்சனம் செய்ததற்கு வருந்துகிறேன்; ரஜினிகாந்த் இனி எப்போதும் எங்களின் புகழ்ச்சிக்குரியவர் -சீமான்
நடிகர் ரஜினிகாந்தை கடும் சொற்களை பயன்படுத்தி விமர்சனம் செய்ததற்காக வருந்துகிறேன். இனி எப்போதும் எங்களின் புகழ்ச்சிக்குரியவர் ரஜினிகாந்த் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
3. உறவுக்கார பெண்ணிடம் தவறாக நடப்பேன் என்று கூறியதால் “தையல் தொழிலாளியை கழுத்தை அறுத்து கொன்றோம்” கைதான நண்பர் வாக்குமூலம்
உறவுக்கார பெண்ணிடம் தவறாக நடப்பேன் என்று கூறியதால், தையல் தொழிலாளியை கழுத்தை அறுத்து கொன்றோம் என்று கைதான நண்பர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
4. கட்சி தொடங்க உள்ள நிலையில், ரஜினிகாந்த் கூறிய வாசகங்கள் இடம்பெற்ற டி-சர்ட்டுகள்; திருப்பூரில் தயாரிப்பு மும்முரம்
நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்க உள்ள நிலையில் அவர் கூறிய வாசகங்கள் இடம் பெற்ற டி-சர்ட்டுகள் தயாரிக்கப்பட்டு தயாரிப்பு திருப்பூரில் மும்முரம்மாக நடந்து வருகிறது.
5. ரஜினிகாந்த் கட்சியால் தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் இல்லை; ராஜ கண்ணப்பன் பேட்டி
ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தால் தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தி.மு.க. தேர்தல் பணிக்குழு இணை செயலாளர் ராஜகண்ணப்பன் கூறினார்.