திருச்சியில் உள்ள நத்தர்ஷா தர்காவில் முதல்-அமைச்சர் பழனிசாமி வழிபாடு


திருச்சியில் உள்ள நத்தர்ஷா தர்காவில் முதல்-அமைச்சர் பழனிசாமி வழிபாடு
x
தினத்தந்தி 31 Dec 2020 5:21 PM GMT (Updated: 31 Dec 2020 5:21 PM GMT)

திருச்சியில் உள்ள நத்தர்ஷா தர்காவில் முதல்-அமைச்சர் பழனிசாமி வழிபாடு செய்தார்.

திருச்சி,

ஆளும் கட்சியான அ.தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 19-ந்தேதி சேலம் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த தொகுதியில் பிரசாரம் தொடங்கினார்.

இந்தநிலையில் இன்று ஸ்ரீரங்கம் தொகுதி மரவனூர் வழியாக மணப்பாறை செல்லும் அவர் அங்குள்ள பஸ் நிலையம் அருகே வீடு, வீடாக சென்று மக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

அதன்பிறகு பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்த அவர், திருச்சி மரக்கடை பகுதியில் நடக்கும் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்றார். இதனையடுத்து நத்தர்ஷா தர்காவில் வழிபாடு செய்து விட்டு முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேசினார்.

முன்னதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

மு.க.அழகிரி கட்சி தொடங்கினால் திமுக நான்காக உடையும். அதிமுகவை உடைக்க பல்வேறு வகையில் ஸ்டாலின் முயற்சி செய்தார். சோதனையிலும் சாதனை படைத்தது அதிமுக அரசு, ஆனால் ஸ்டாலின் காணொலி மூலம் பேசி வருகிறார் என்றார்.

Next Story