கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டை நீட்டிக்க வேண்டும் - டாக்டர் ராமதாஸ் அறிக்கை


கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டை நீட்டிக்க வேண்டும் - டாக்டர் ராமதாஸ் அறிக்கை
x
தினத்தந்தி 1 Jan 2021 6:57 PM GMT (Updated: 1 Jan 2021 6:57 PM GMT)

கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டை நீட்டிக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழுவின் துணை நிறுவனங்களில் அறிவியலாளர் பணியிடங்களுக்கான ஆள்தேர்வில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியலினத்தவர், பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு மறுக்கப்பட்டிருக்கிறது. உயர்நிலை அறிவியலாளர் பணிகளுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட மாட்டாது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

உயர்கல்வி நிறுவனங்களில் தகுதிக்கு மட்டும்தான் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று கூறி, இட ஒதுக்கீட்டை முடக்கும் சதித்திட்டங்கள் அண்மைக்காலமாக தீட்டப்பட்டு வருகின்றன.

எனவே சில நிறுவனங்களை இடஒதுக்கீட்டில் இருந்து விலக்கி வைப்பது என்ற கொள்கை திருத்தப்பட வேண்டும். மத்திய அரசின் அனைத்து நிறுவன வேலைவாய்ப்புகளிலும், மத்திய அரசின் அனைத்து கல்வி நிறுவங்களிலும் அனைத்து இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு முழுமையான இடஒதுக்கீடு வழங்கும் வகையில் அரசியலமைப்பு சட்டங்களில் உரிய திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். அதன் மூலம் சமூகநீதியை மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story