மாநில செய்திகள்

மு.க.ஸ்டாலின் கலந்து கொண்ட திமுக கிராம சபை கூட்டத்தில் பெண்ணால் சலசலப்பு ; திமுக- அதிமுக போட்டி சாலை மறியல் + "||" + With Stalin in attendance DMK meeting chatter of the woman

மு.க.ஸ்டாலின் கலந்து கொண்ட திமுக கிராம சபை கூட்டத்தில் பெண்ணால் சலசலப்பு ; திமுக- அதிமுக போட்டி சாலை மறியல்

மு.க.ஸ்டாலின் கலந்து கொண்ட  திமுக கிராம சபை கூட்டத்தில் பெண்ணால் சலசலப்பு ; திமுக- அதிமுக போட்டி சாலை மறியல்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற கிராம சபை கூட்டத்தில் ஒரு பெண் எழுப்பிய சலசலப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு திமுக அதிமுக போட்டி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கோவை

கோவை மாவட்டம் தேவராயபுரம் ஊராட்சியில் நடைபெறும் மக்கள் கிராம சபை கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழகத்திலேயே கோவையில்தான் அதிக முறைகேடுகள் நடைபெறுகிறது. கிராம சபை கூட்டத்தை தடுத்தாலும், மக்களை சந்திப்பதை தடுக்க முடியாது.அதிமுக ஆட்சிக்காலத்தில் ஒருமுறை கூட கிராம சபை கூட்டம் நடத்தப்படவில்லை.12,600க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் மக்கள் கிராம சபை கூட்டத்தை நடத்த திமுக திட்டமிட்டுள்ளது

திமுக தேர்தல் அறிக்கையில் மிக முக்கிய அங்கமாக ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை இருக்கும் .  திமுக ஆட்சி அமைந்த பிறகு, விசாரணை நடத்தி தண்டனை வாங்கி கொடுப்பது உறுதி.மக்கள் சபை கூட்டத்தில் பெண்கள் அதிகளவில் பங்கேற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது  என கூறினார்.

பின்னர் கூட்டத்தில் இருந்த மக்களிடம் ஸ்டாலின் குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது, விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய வேண்டும். நீர்வளத்தை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இந்நிலையில், கூட்டத்தில் இருந்து எழுந்த பெண் ஒருவர் கிராம சபைக் கூட்டத்தை எதற்கு நடத்துகிறீர்கள்என ஸ்டாலினிடம் கேட்டார். அப்போது, நீங்கள் எந்த ஊர் என அவர் கேட்டதைத் தொடர்ந்து மைல்கல் என பெண் கூறினார். இதைடுத்து, அது எந்த சட்டப்பேரவைத் தொகுதியில் வருகிறது என ஸ்டாலின் கேட்டார்.

அப்போது, ஆவேசமடைந்த அந்தப் பெண் இது கூடத் தெரியாமல் தான் நீங்கள்  கிராமசபை கூட்டம் நடத்துகிறீர்களா எனக் கேட்டார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

பின்னர் கிராம சபை கூட்டத்தில் கேள்வி கேட்க முயன்ற பெண் வெளியேற்றப்பட்டார். அவர்  கோஷம் எழுப்பிகொண்டே சென்றார்.

இது குறித்து திமுகவினர் கூறும் போது கேள்வி கேட்க முயன்ற பெண் அமைச்சர் எஸ்பி வேலுமணியால் அனுப்பப்பட்டவர் .கிராம சபை கூட்டத்திற்கு இடையூறு செய்ய வேண்டும் என அனுப்பியுள்ளனர் என கூறினர்.

இதனால் கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் ஸ்டாலினை கண்டித்து அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.   அதிமுகவினருக்கு எதிராக திமுகவினரும் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. சட்டப்பேரவை தேர்தல்: திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கு நேர்காணல் தொடங்கியது
சட்டப்பேரவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுடனான நேர்காணல் தற்போது தொடங்கியுள்ளது.
2. 7ம் தேதி திருச்சியில் நடைபெறும் திமுக கூட்டத்தில் 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டத்தை அறிவிக்க உள்ளேன் - மு.க.ஸ்டாலின்
மக்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஆட்சிமாற்றம் 2 மாதங்களில் ஏற்பட உள்ளது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
3. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட விருப்பமனு தாக்கல்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்தார்.
4. டெண்டர்களை விட்டு அரசு கஜானாவை எடப்பாடி பழனிசாமி காலி செய்து விட்டார்; மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
தேர்தலுக்கு முன் பணிகளை நிறைவேற்ற முடியாது என்று அறிந்திருந்தும் டெண்டர்களை விட்டு அரசு கஜானாவை எடப்பாடி பழனிசாமி காலி செய்து விட்டார் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
5. புதுச்சேரியில், ஜனநாயக படுகொலையை நடத்தியிருக்கிறது, மத்திய அரசு - மு.க.ஸ்டாலின் அறிக்கை
‘‘புதுச்சேரியில் ஜனநாயகப் படுகொலையை நடத்தியிருக்கிறது மத்திய பா.ஜ.க அரசு.'', என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-