சட்டமன்ற தேர்தலில் எனக்கு எதிராக போட்டியிட தயாரா? - உதயநிதி ஸ்டாலினுக்கு குஷ்பு சவால்


சட்டமன்ற தேர்தலில் எனக்கு எதிராக போட்டியிட தயாரா? - உதயநிதி ஸ்டாலினுக்கு குஷ்பு சவால்
x
தினத்தந்தி 2 Jan 2021 8:59 AM GMT (Updated: 2 Jan 2021 8:59 AM GMT)

2021 சட்டமன்ற தேர்தலில் எனக்கு எதிராக போட்டியிட உதயநிதி ஸ்டாலின் தயாரா? என குஷ்பு சவால் விடுத்து உள்ளார்.

சென்னை

எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியே நீடிப்பார் என அக்கட்சி சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்தார். 

தமிழகம் வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்ட விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வமும் அதிமுக பா.ஜனதா கூட்டணி தொடரும் என்று கூறினர்.

இதனையடுத்து பா.ஜனதா   அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என கருதப்பட்ட நிலையில், அரியலூரியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜனதா தலைவர் எல்.முருகன் யார் முதல்வர் வேட்பாளர் என்பதை பா.ஜனதா தலைமை தான் முடிவு செய்யும். முதல்வர் வேட்பாளர் அதிமுக தலைவராக இருப்பினும், அது குறித்தான அறிவிப்பை பா.ஜனதா  தலைமையே அறிவிக்கும் என தெரிவித்தார். அவர் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதிமுகவினர் பலர் முருகனுக்கு பதிலளிக்கும் விதமாக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்று உறுதியாக கூறினர். சமீபத்தில் நடந்த அதிமுக கூட்டத்திலும் முதல்வர் வேட்பாளர் குறித்து அதிமுக, தன்னுடைய உறுதியை பதிவு செய்திருந்தது.

இந்த நிலையில் பா.ஜனதாவை சேர்ந்த குஷ்பு கூறும் போது  

முதல்வர் வேட்பாளரை தேசிய ஜனநாயக கூட்டணி அறிவிப்பது மரபு . பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்று கொண்டுள்ளோம். கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் குறித்து 5 நாட்களில் பா.ஜனதா தலைமை அறிவிக்கும் என கூறினார்.

மேலும் பாஜனதா தலைமை வாய்ப்பளித்தால், எந்த தொகுதியிலும் போட்டியிட தயார். தன்னை எதிர்த்து போட்டியிட தயாரா? என  உதயநிதி ஸ்டாலினுக்கு குஷ்பு சவால் விடுத்தார்.


Next Story