பொங்கல் பரிசை பெற முடியாதவர்கள், பொங்கல் பண்டிகைக்கு பிறகும் வாங்கிக்கொள்ளலாம் - அமைச்சர் செல்லூர் ராஜு


பொங்கல் பரிசை பெற முடியாதவர்கள், பொங்கல் பண்டிகைக்கு பிறகும் வாங்கிக்கொள்ளலாம் - அமைச்சர் செல்லூர் ராஜு
x
தினத்தந்தி 2 Jan 2021 11:19 AM GMT (Updated: 2 Jan 2021 11:19 AM GMT)

பொங்கல் பரிசை தற்போது பெற முடியாதவர்கள், பொங்கல் பண்டிகைக்கு பிறகும் வாங்கிக்கொள்ளலாம் என்று அமைச்சர் செல்லுர் ராஜூ தெரிவித்துள்ளார்.

சென்னை,

பொங்கல் பண்டிகைக்காக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதனையடுத்து அப்பரிசுத் தொகையை பெறுவதற்கான டோக்கன்கள் அவரவர் வீடுகளுக்கு சென்று கொடுக்கும் பணிகள் நடைபெற்றன.

இந்நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

பொங்கலுக்கு முன் ரூபாய் 2,500 பரிசுத்தொகுப்பு பெற முடியாதவர்கள் ஜனவரி 19 ஆம் தேதி பெற்றுக்கொள்ளலாம். ஜனவரி 4-ம் தேதி முதல் காலையில் 100 பேருக்கும், மதியம் 100 பேருக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்றார்.

அதிமுக, பாஜக கூட்டணி சலசலப்பு குறித்து கேள்வி எழுப்பிய போது, தேர்தல் நேரத்தில் தான் கூட்டணி முடிவு செய்யப்படும். அதுவரை பழைய கூட்டணியினர் நண்பர்களாக இருப்பர். கூட்டணியில் இறுதிநேரத்தில் தொகுதிகள் வழங்குவதில் சில மாற்றங்கள் ஏற்படலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story