தங்கம் விலை பவுனுக்கு ரூ.104 உயர்வு; ரூ.37,984-க்கு விற்பனை


தங்கம் விலை பவுனுக்கு ரூ.104 உயர்வு; ரூ.37,984-க்கு விற்பனை
x
தினத்தந்தி 2 Jan 2021 10:15 PM GMT (Updated: 2 Jan 2021 10:15 PM GMT)

ஆபரண தங்கத்தின் விலை நேற்று கிராமுக்கு ரூ.13 உயர்ந்து ரூ.4 ஆயிரத்து 748-க்கு விற்பனையானது.

சென்னை,

சர்வதேச தங்கம் சந்தைக்கு கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டை முன்னிட்டு திங்கட்கிழமை (நாளை) வரை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் கடந்த டிசம்பர் 24-ந்தேதியில் இருந்து தற்போது வரை தங்கத்தின் விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் இருந்து வருகிறது. குறிப்பாக கடந்த 24-ந்தேதி தங்கம் ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 720-க்கு விற்பனையானது.

இந்தநிலையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.13 உயர்ந்து ரூ.4 ஆயிரத்து 748-க்கும், பவுனுக்கு ரூ.104 உயர்ந்து ரூ.37 ஆயிரத்து 984-க்கு விற்பனையானது. இதேபோல் 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு பவுன் ரூ.41 ஆயிரத்து 56-க்கு விற்பனை செய்யப்பட்டது.

பொதுவாக தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்தனர். அதேபோல் பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை உயர்ந்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால் தொழில்துறை தேக்கம் குறித்த பீதி நிலவி வரும் நிலையில், தங்கம் விலையில் தற்போது ஏற்ற இறக்கம் நிலவி வருகின்றது.

சர்வதேச சந்தை விடுமுறை முடிந்து வருகிற 4-ந்தேதிக்கு திறக்கப்படும் போது விலைகள் ஏறுவதற்கு வாய்ப்பு உள்ளது. மேற்கண்ட தகவலை மெட்ராஸ் ஜூவல்லரி விற்பனையாளர்கள் சங்க தலைவர் ஜெயந்திலால் கூறினார்.

Next Story