குரூப்-1 முதல்நிலை தேர்வு தொடங்கியது


குரூப்-1 முதல்நிலை தேர்வு தொடங்கியது
x
தினத்தந்தி 3 Jan 2021 4:55 AM GMT (Updated: 3 Jan 2021 4:55 AM GMT)

தமிழகத்தில் 856 இடங்களில் குரூப்-1 முதல்நிலை தேர்வு தொடங்கியது. இந்த தேர்வினை 2.57 லட்சம் பேர் எழுதுகிறார்கள்.

சென்னை,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) துணை கலெக்டர் (18), துணை போலீஸ் சூப்பிரண்டு (19), வணிக வரித்துறை உதவி கமி‌‌ஷனர் (10), கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் (14), ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் (4), தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள் மாவட்ட அதிகாரி (1) என குரூப்-1 பதவியில் அடங்கிய 66 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஆண்டு ஜனவரி 20-ந்தேதி வெளியிட்டது.

இந்த தேர்வுக்கு விண்ணப்பம் செய்ய பிப்ரவரி 19-ந்தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஏராளமானோர் போட்டி போட்டு விண்ணப்பித்தனர். 

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் 66 காலிபணியிடங்களுக்கான டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 முதல்நிலை தேர்வு இன்று தொடங்கியது. இந்த தேர்வினை தமிழகம் முழுவதும் 856 மையங்களில் 2.57 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.

Next Story