ஒரே நாளில் ரூ.536 அதிகரிப்பு:தங்கம் விலை மீண்டும் ரூ.38 ஆயிரத்தை தாண்டியது


ஒரே நாளில் ரூ.536 அதிகரிப்பு:தங்கம் விலை மீண்டும் ரூ.38 ஆயிரத்தை தாண்டியது
x
தினத்தந்தி 4 Jan 2021 4:23 PM GMT (Updated: 4 Jan 2021 4:23 PM GMT)

தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.536 அதிகரித்தது. இதனால் தங்கம் விலை மீண்டும் ரூ.38 ஆயிரத்தை தாண்டியது. ஒரு பவுன் ரூ.38 ஆயிரத்து 520–க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை

சென்னையில் நேற்று  கிராம் ரூ.4 ஆயிரத்து 748–க்கும், பவுன் ரூ.37 ஆயிரத்து 984–க்கும் தங்கம் விற்பனை ஆனது. இந்தநிலையில் தங்கம் விலை நேற்று உயர்ந்தது. முந்தைய நாள் விலையை காட்டிலும் கிராமுக்கு ரூ.67 உயர்ந்து ரூ.4 ஆயிரத்து 815–க்கும், பவுனுக்கு ரூ.536 உயர்ந்து ரூ.38 ஆயிரத்து 520–க்கும் தங்கம் இன்று  விற்பனை ஆனது.

கடந்த நவம்பர் மாதம் 21–ந்தேதி ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 760–க்கும், பவுன் ரூ.38 ஆயிரத்து 80–க்கும் தங்கம் விற்பனை ஆகியிருந்தது. அதனைத்தொடர்ந்து குறையத் தொடங்கிய தங்கம் விலை, ஒரு மாதத்துக்கு பிறகு அதாவது கடந்த மாதம் 21–ந்தேதி மீண்டும் ரூ.38 ஆயிரத்தை எட்டியது. அன்றைய தினம் ஒரு பவுன் தங்கம் ரூ.38 ஆயிரத்து 152–க்கு விற்பனை ஆனது குறிப்பிடத்தக்கது.

தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் அதிகரித்தது. சென்னையில் நேற்று ஒரு கிராம் ரூ.72–க்கும், கிலோ ரூ.72 ஆயிரத்துக்கும் வெள்ளி விற்பனை ஆனது. முந்தைய நாள் விலையை காட்டிலும் கிராமுக்கு 2 ரூபாய் 10 பைசா அதிகரித்து ரூ.74.10–க்கும், கிலோவுக்கு ரூ.2,100 அதிகரித்து ரூ.74 ஆயிரத்து 100–க்கும் வெள்ளிஇன்று  விற்பனை ஆனது.

உலக சந்தையில் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்திருப்பதும், அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்திருப்பதுமே தங்கத்தின் விலை உயர்வுக்கான காரணம் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Next Story