மாநில செய்திகள்

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை + "||" + Courtallam Falls Flooding: Tourists banned from bathing

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
தென்காசி, 

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் மற்றும் சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் தினமும் ஆயிரக்கணக்கானோர் குற்றாலம் அருவிகளில் குளித்து செல்கிறார்கள்.

அருவிக்கு செல்லும் முன்பு, உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு, சமூக இடைவெளியில் நின்று குளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்படுகிறது. மலைப்பகுதியில் தொடர்ந்து மழை நீடிப்பதால், நேற்று காலை 10 மணி அளவில் திடீரென மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு வளைவை (ஆர்ச்) தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதால், பின்னர் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்தனர். மதியம் 1.45 மணிக்கு பழைய குற்றாலம் அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கும் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் ஐந்தருவி, புலியருவி ஆகியவற்றில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கு: 68 உடல்கள் இதுவரை மீட்பு
உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்களில் இன்னும் 136- பேரை கண்டறியும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
2. உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கு: மேலும் 5 உடல்கள் மீட்பு: மொத்த எண்ணிக்கை 67 ஆக உயர்வு
உத்தரகாண்ட் சாமோலி பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்த 67 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
3. உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்த 62 பேரின் உடல்கள் மீட்பு
உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்த 62 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
4. உத்தரகாண்ட் வெள்ளப் பெருக்கில் சிக்கி 10 பேர் உயிரிழப்பு: அமெரிக்கா இரங்கல்
வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.
5. நெல்லை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: சேதம் அடைந்த இடங்களில் அமைச்சர்கள் ஆய்வு
நெல்லை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையொட்டி சேதம் அடைந்த இடங்களை, அமைச்சர்கள் உதயகுமார், கடம்பூர் ராஜூ, ராஜலட்சுமி ஆகியோர் ஆய்வு செய்தனர்.