தியேட்டர்களில் 100% ரசிகர்களை அனுமதிப்பது நல்லதல்ல- சென்னை உயர் நீதிமன்றம்


தியேட்டர்களில் 100% ரசிகர்களை அனுமதிப்பது நல்லதல்ல- சென்னை உயர் நீதிமன்றம்
x
தினத்தந்தி 8 Jan 2021 9:21 AM GMT (Updated: 8 Jan 2021 9:21 AM GMT)

பள்ளிகள் மூடியிருக்கும் பொழுது தியேட்டர்களில் 100 சதவீதம் ரசிகர்களை அனுமதிப்பது சரியல்ல என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்ததற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.   இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம்,  கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் வரை தமிழக அரசு எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தியது. 

மேலும், திரையரங்கு விவகாரத்தில் குழந்தைகள் போன்று அரசு மெதுவாக அடியெடுத்து வைக்க வேண்டும் என்றும், பள்ளிகள் மூடியிருக்கும் போது தியேட்டர்களில் 100 சதவீதம் அனுமதிப்பது சரியல்ல. 

உயர் நீதிமன்ற கிளை உத்தரவுப்படி ஜனவரி 11 ஆம் தேதி வரை 50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்கள் இயங்க வேண்டும். உயர்நீதிமன்றத்தில் உள்ள வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையே சேர்த்து விசாரிக்கும்” என்று தெரிவித்தது. 


Next Story