தேர்தலில் அதிமுக - திமுகவிற்கு இடையேதான் போட்டி: தேசிய கட்சிகள் பொருட்டே இல்லை - பொதுக்குழுவில் கே.பி.முனுசாமி பேச்சு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 9 Jan 2021 9:11 AM GMT (Updated: 9 Jan 2021 9:11 AM GMT)

தேர்தலில் அதிமுக - திமுகவிற்கு இடையேதான் போட்டி என்றும், தேசிய கட்சிகள் ஒரு பொருட்டே இல்லை என்றும் அதிமுக பொதுக்குழுவில் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

சென்னை, 

அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று காலை சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக இந்த கூட்டம் நடைபெற்றுவருவதால், கூட்டணி உள்பட பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தேர்தலில் அதிமுக - திமுகவிற்கு இடையேதான் போட்டி என்றும், தேசிய கட்சிகள் ஒரு பொருட்டே இல்லை என்றும் அதிமுக பொதுக்குழுவில் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி தெரிவித்தார். 

இதுதொடர்பாக மேலும் பேசிய அவர், “தேர்தலில் திமுக -அதிமுக இடையேதான் நேரடி போட்டி. ஜனநாயக அரசியலுக்கும், வாரிசு அரசியலுக்கும் தான் போட்டி. தேர்தலில் தேசிய கட்சிகள் ஒரு பொருட்டே இல்லை. அதிமுகவில் ஸ்லீப்பர் செல்லுக்கு வாய்ப்பு இல்லை. யார் வெளியே வந்தாலும், அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது. அவர் வெளியே வந்தாலும் அவருக்கு ஆயிரம் பிரச்னைகள் உள்ளது. தமிழகத்தில் அதிமுக அல்லது திமுக முதுகில் ஏறிதான் தேசிய கட்சிகள் பயணம் செய்ய முடியும்” என்று கூறினார்.

Next Story