மாநில செய்திகள்

மின்சார ரெயிலில் மது போதையில் தூங்கிய பெண், பலாத்காரம் செய்த துப்புரவு தொழிலாளர்கள் + "||" + Woman asleep under the influence of alcohol, raped cleaners

மின்சார ரெயிலில் மது போதையில் தூங்கிய பெண், பலாத்காரம் செய்த துப்புரவு தொழிலாளர்கள்

மின்சார ரெயிலில் மது போதையில் தூங்கிய பெண், பலாத்காரம் செய்த துப்புரவு தொழிலாளர்கள்
தாம்பரத்தில் மின்சார ரெயிலில் மது போதையில் தூங்கிய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை,

செங்கல்பட்டு அடுத்த பரனுரை சேர்ந்த 40 வயதான ஒரு பெண், கடந்த 8-ம் தேதி இரவு பல்லாவரத்தில் இருந்து பரனூர் செல்ல செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயிலில் ஏறினார். குடிபோதையில் இருந்ததால் அப்பெண் அயர்ந்து தூங்கியதாக தெரிகிறது. இதனால் அந்த மின்சார ரெயில் செங்கல்பட்டு சென்று அங்கிருந்து மீண்டும் கடற்கரை ரெயில் நிலையத்திற்கு சென்று, மீண்டும் தாம்பரம் வந்துள்ளது. அதன்பின் தாம்பரம் ரெயில்வே பணிமனைக்கு சென்றுள்ளது.

நள்ளிரவு 1.00 மணியளவில் அப்பெண் திடிரேன போதை தெளிந்து கண் விழித்து பார்த்தபோது பணிமனையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இரவு நேரம் என்பதால் வெளியே செல்ல பயந்த அவர் ரெயில் உள்ளேயே இருக்க முடிவு செய்தார்.

அப்போது அங்கு வந்த துப்புரவு தொழிலாளர்கள்  சுரேஷ் (30), அப்துல் அஜிஸ் (30) ஆகிய இருவரும் தனியாக இருந்த பெண்ணை வலுகட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் இங்கு நடந்ததை வெளியே கூறக்கூடாது என அப்பெண்ணை மிரட்டி அனுப்பியுள்ளனர்.

இதையடுத்து அப்பெண் தாம்பரம் ரெயில்வே போலீசாரிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில் சுரேஷ் மற்றும் அப்துல் அஜிஸ் இருவரையும் கைது செய்தனர்.