மாநில செய்திகள்

மேலடுக்கு சுழற்சி காரணமாக ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் + "||" + Chance of heavy rain in Ramanathapuram, Thoothukudi and Nellai today due to overcast skies - Meteorological Center

மேலடுக்கு சுழற்சி காரணமாக ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

மேலடுக்கு சுழற்சி காரணமாக ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
சென்னை,

இலங்கை மற்றும் குமரி கடல் பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தென்தமிழகத்தில் அனேக இடங்களில் மிதமான மழையும், ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிக கன மழையும், கன்னியாகுமரி, தேனி, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதேபோல் நாளை (புதன்கிழமை) தென் தமிழகத்தல் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும்.

அதேபோல் வருகிற 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியசும் (86 டிகிரி), குறைந்த பட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை (75.2 டிகிரி) ஒட்டியும் இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கன மழையும் பதிவாகி உள்ளது. புவனகிரியில் 11 சென்டி மீட்டரும், பரங்கிப்பேட்டை 9, ராமநாதபுரம், குடிவாசல் தலா 6, ராமேஸ்வரம், கொள்ளிடம் தலா 5, மணல்மேல்குடி, முத்துப்பேட்டை, மண்டபம், சூரன்குடி, அறந்தாங்கி, அய்யம்பேட்டை தலா 4, சிதம்பரம், வாலிநோக்கம், கும்பகோணம், ஜெயங்கொண்டம், மணல்மேடு, சேரன்மாதேவி தலா 3 என்ற அளவில் மழை பதிவாகி உள்ளது.

தென்மேற்கு வங்க கடல் பகுதிகள், குமரி கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் இன்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். அதேபோல் இன்றும், நாளை (புதன்கிழமை) ஆகிய நாட்களில் கேரள கடலோர பகுதி மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதிகளில் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். இதனால் மீனவர்கள் இப்பகுதிக்கு மீன் பிடிக்க செல்வதை தவிர்க்க வேண்டும்.

மேற்கண்ட தகவலை சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் நா.புவியரசன் தெரிவித்து உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. 6ம் கட்ட தேர்தல் பிரசாரத்தை தூத்துக்குடியில் தொடங்குகிறார் முதலமைச்சர் பழனிசாமி
வரும் 17ம் தேதி 6ம் கட்ட தேர்தல் பிரசாரத்தை முதலமைச்சர் பழனிசாமி தூத்துக்குடியில் தொடங்குகிறார்.
2. நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் டாக்டர் உள்பட 6 பேருக்கு கொரோனா
நெல்லை மாவட்டத்தில் நேற்று ஒருவருக்கு மட்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
3. வடியாத மழைநீரால் மக்கள் அவதி: தூத்துக்குடியில் தனித்தனி தீவுகளாக மாறிய தெருக்கள்
தூத்துக்குடியில் வடியாத மழைநீரால் அனைத்து தெருக்களும் தனித்தனி தீவுகளாக மாறியதால் மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
4. நெல்லை தாமிரபரணி வெள்ளத்தில் குறுக்குத்துறை முருகன் கோவில், 100 மின்கம்பங்கள் சேதம்; சீரமைப்பு பணிகள் தீவிரம்
தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் நெல்லை குறுக்குத்துறை முருகன் கோவில் மற்றும் 100 மின்கம்பங்கள் சேதமடைந்தன. அவற்றை சீரமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
5. ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் அருகே கண்மாய் உடைந்து குடியிருப்பு பகுதியில் தண்ணீர் புகுந்தது
நயினார்கோவில் அருகே கண்மாய் உடைந்து குடியிருப்பு பகுதியில் தண்ணீர் புகுந்ததால் கிராமமக்கள் கடும் அவதிடைந்தனர்.