மாநில செய்திகள்

தமிழகம் வருகிறார் ராகுல்காந்தி: மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்வையிட திட்டம் + "||" + Rahul Gandhi is coming to Tamil Nadu: The plan is to watch the jallikkattu competitions to be held in Madurai

தமிழகம் வருகிறார் ராகுல்காந்தி: மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்வையிட திட்டம்

தமிழகம் வருகிறார் ராகுல்காந்தி: மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்வையிட திட்டம்
மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்வையிட ராகுல்காந்தி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை, 

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தில் ராகுல்காந்தி முதல்கட்டமாக 3 நாள்கள் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா் தினேஷ் குண்டுராவ் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, நாளை மறுநாள் (ஜனவரி 14 ஆம் தேதி) தமிழகம் வர உள்ளார். அன்றைய தினம் மதுரை அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை பார்வையிட திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினருடன் ஆலோசனையில் ஈடுபடுவார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனிடையே  பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவும், ராகுல் காந்தி வரும் அதே நாளில் தமிழகம் வர உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகம் மின்மிகு மாநிலமாக திகழ்கிறது என்று கோவையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்
தமிழகம் மின்மிகு மாநிலமாக திகழ்கிறது என்று கோவையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதத்துடன் கூறினாார்.
2. தமிழகத்தில் 5 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
3. தமிழகத்தில் 9, 10, 11-ம் வகுப்பு பள்ளி மாணவர்கள் ஆல் பாஸ் - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு
தமிழகத்தில் 9, 10, 11-ம் வகுப்பு பள்ளி மாணவர்கள் ஆல் பாஸ் என்று முதலமைச்சர் பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
4. தமிழகத்தில் ஒரே நாளில் 14,043 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது - சுகாதாரத்துறை
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 14,043 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
5. தமிழகத்தில் இதுவரை கொரோனா தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியது - சுகாதாரத்துறை தகவல்
தமிழகத்தில் இதுவரை கொரோனா தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டி உள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை