மாநில செய்திகள்

மிளகு ரசம், பூண்டு ரசம் சாப்பிட்டால் கொரோனா வைரஸ் ஓடி ஒழிந்து விடும் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி + "||" + Corona virus can be eradicated by consuming pepper and garlic rasam - Minister Rajendra Balaji

மிளகு ரசம், பூண்டு ரசம் சாப்பிட்டால் கொரோனா வைரஸ் ஓடி ஒழிந்து விடும் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

மிளகு ரசம், பூண்டு ரசம் சாப்பிட்டால் கொரோனா வைரஸ் ஓடி ஒழிந்து விடும் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
மிளகு ரசம், பூண்டு ரசம் சாப்பிட்டால் கொரோனா வைரஸ் ஓடி ஒழிந்து விடும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
விருதுநகர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மல்லி பகுதியில் தமிழக அரசின் அம்மா மினி கிளினிக்கை பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இன்று திறந்து வைத்தனர். இதன் பின்னர் விழாவில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “இப்போது அம்மா மினி கிளினிக் அமைந்திருக்கும் பகுதியான மல்லி, டில்லிக்கு இணையான பகுதி” என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், “மிளகு ரசம், பூண்டு ரசம் வைத்து ஒரு கிளாஸ் குடித்தால் கொரோனா வைரஸ் ஓடி ஒழிந்து விடும்” என்று தெரிவித்தார். சுக்கு, மிளகு உள்ளிட்டவற்றை நமது உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் என்று அவர் கூறினார்.