மாநில செய்திகள்

பொங்கல் பண்டிகை: மின்சார ரெயில் சேவையில் மாற்றம் - சென்னை ரெயில்வே கோட்டம் அறிவிப்பு + "||" + Pongal Festival: Change in Electric Rail Service - Chennai Railway Division Announcement

பொங்கல் பண்டிகை: மின்சார ரெயில் சேவையில் மாற்றம் - சென்னை ரெயில்வே கோட்டம் அறிவிப்பு

பொங்கல் பண்டிகை: மின்சார ரெயில் சேவையில் மாற்றம் - சென்னை ரெயில்வே கோட்டம் அறிவிப்பு
பொங்கல் பண்டிகையையொட்டி மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை ரெயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
சென்னை, 

ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு சென்னையில் 660 மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. அத்தியாவசிய பணியாளர், தனியார் நிறுவன ஊழியர்கள், பெண்கள், குழந்தைகள், பொது மக்கள் என படிப்படியாக அனைவரும் மின்சார ரெயிலில் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் ஞாயிற்றுக்கிழமை உள்ளிட்ட விடுமுறை நாட்களில் மட்டும் குறைந்த அளவிலான மின்சார ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே ஏற்கனவே அறிவித்திருந்தது. அந்தவகையில் பொங்கல் பண்டிகையையொட்டி மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு குறைந்த அளவில் ரெயில்கள் இயக்கப்படுகிறது. 

இதுகுறித்து சென்னை ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

நாளை (14-ந்தேதி) பொங்கல் பண்டிகை என்பதால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 401 மின்சார ரெயில் சேவைகள் மட்டுமே இயக்கப்படும். அதாவது ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணை பின்பற்றப்படும். மேலும், டிக்கெட் முன்பதிவு மையங்களும் ஞாயிற்றுக்கிழமை அட்டவணை படி காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.