மாநில செய்திகள்

2019ம் ஆண்டு போராடிய ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான நடவடிக்கையை திரும்பப்பெற வேண்டும் - விஜயகாந்த் வலியுறுத்தல் + "||" + Action against Teachers, govt employees who protested in 2019 should be withdrawn - Vijayakanth insists

2019ம் ஆண்டு போராடிய ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான நடவடிக்கையை திரும்பப்பெற வேண்டும் - விஜயகாந்த் வலியுறுத்தல்

2019ம் ஆண்டு போராடிய ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான நடவடிக்கையை திரும்பப்பெற வேண்டும் - விஜயகாந்த் வலியுறுத்தல்
2019ம் ஆண்டு போராடிய ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான நடவடிக்கையை திரும்பப்பெற வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை திரும்பப்பெற வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோஜியோ கடந்த 3½ ஆண்டுகளுக்கும் மேலாக நியாயமான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராடி வருகிறது.

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தினை ரத்து செய்துவிட்டு, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2019ம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் 5,068 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வதற்கான குறிப்பாணைகளைப் பிறப்பித்திருக்கிறது.

இந்த குறிப்பாணைகளால் கடந்த 2 ஆண்டுகளில் பணி ஓய்வுபெற்ற 42க்கும் மேற்பட்டவர்கள் தங்களுக்குரிய ஓய்வூதிய பயன்களைப் பெற முடியாமல் தவித்து வருகின்றனர். பணிக்காலம் முடிந்துவிட்டது என்றாலும் அவர்கள் அதிகாரப்பூர்வமாக இன்னும் பணி ஓய்வைப்பெற முடியவில்லை. இதனால் அவர்களும், அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். எனவே, 5,068 பேர் மீதான நடவடிக்கைகள் அனைத்தையும் தமிழக அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும். மேலும், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் போராட்டம்
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகம் முன்பு நேற்று மாலை நேர தர்ணா போராட்டம் நடந்தது.
2. 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சையில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
தஞ்சை மாவட்ட தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சை மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி அலுவலகம் முன்பு நேற்று நடைபெற்றது.
3. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
பூதலூர் வட்டார தொடக்க கல்வி அலுவலகத்தின் முன்பாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
4. கரூர் கலெக்டர் அலுவலகத்தில் பணி நிரந்தரம் செய்யக்கோரி பகுதிநேர ஆசிரியர்கள் மனு
கரூர் கலெக்டர் அலுவலகத்தில் பணி நிரந்தரம் செய்யக்கோரி பகுதிநேர ஆசிரியர்கள் மனு அளித்தனர்.
5. தூத்துக்குடியில் ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடியில் ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.