மாநில செய்திகள்

தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்கள் மது அருந்தக் கூடாது - அமைச்சர் விஜயபாஸ்கர் + "||" + Those who are vaccinated should not drink alcohol

தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்கள் மது அருந்தக் கூடாது - அமைச்சர் விஜயபாஸ்கர்

தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்கள் மது அருந்தக் கூடாது - அமைச்சர் விஜயபாஸ்கர்
கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்திக்கொள்பவர்கள் 2வது டோஸ் போடும் வரையில் 28 நாள்களுக்கு மது அருந்தக்கூடாது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
திருச்சி,

திருச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் ஜனவரி 16 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளன. தமிழகத்தில் முதற்கட்டமாக வரும் 16 ஆம் தேதி 307 மையங்களில் தடுப்பூசி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் செலுத்திக்கொள்பவர்கள் 2வது டோஸ் போடும் வரையில் 28 நாள்களுக்கு மது அருந்தக்கூடாது மேலும். தடுப்பூசி போடுபவர்களை எந்த வகையிலும் தனிமைப்படுத்தக் கூடாது என்றார்.