மாநில செய்திகள்

“ஜல்லிக்கட்டு போட்டிகளை நேரில் காண கூட்டம் கூட வேண்டாம்” - பொதுமக்களுக்கு போலீசார் வேண்டுகோள் + "||" + "Don't gather to watch jallikkattu live" - ​​Police appeal to the public

“ஜல்லிக்கட்டு போட்டிகளை நேரில் காண கூட்டம் கூட வேண்டாம்” - பொதுமக்களுக்கு போலீசார் வேண்டுகோள்

“ஜல்லிக்கட்டு போட்டிகளை நேரில் காண கூட்டம் கூட வேண்டாம்” - பொதுமக்களுக்கு போலீசார் வேண்டுகோள்
“ஜல்லிக்கட்டு போட்டிகளை நேரில் காண கூட்டம் கூட வேண்டாம்” என பொதுமக்களுக்கு போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மதுரை,

மதுரை மாவட்டம் மதுரை (தெற்கு) தாலுகாவில் உள்ள அவனியாபுரம், வாடிப்பட்டி தாலுகாவில் உள்ள பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதிக்கப்பட்டு ஏற்கனவே அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட அரசாணையில் திருப்பூர், திண்டுக்கல், தேனி, புதுக்கோட்டை உள்ளிட்ட சில மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. 

இந்நிலையில் புகழ்பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட ஜல்லிக்கட்டு போட்டிகளை நேரில் காண பொதுமக்கள் கூட்டம் கூட வேண்டாம் என்றும், அப்போட்டிகள் சமூகவலை தளங்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் மதுரை மாவட்ட எஸ்.பி. சுஜித்குமார் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்ட காவல்துறையின் முகநூல், டுவிட்டர் மற்றும் யூ-டியூப் பக்கங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய இருப்பதாகவும், பொது மக்கள் அதனை தாங்கள் இருக்கும் இடங்களில் இருந்தே நேரடியாக கண்டு களிக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.