கொரோனா தடுப்பூசி போட்டுவிட்டு மது அருந்தக்கூடாது- அமைச்சர் விஜயபாஸ்கர் + "||" + Corona vaccination should not be followed by alcohol - Minister Vijayabaskar
கொரோனா தடுப்பூசி போட்டுவிட்டு மது அருந்தக்கூடாது- அமைச்சர் விஜயபாஸ்கர்
கொரோனா தடுப்பூசி போட்டுவிட்டு மது அருந்தக்கூடாது. தடுப்பூசி குறித்து தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டாம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
சென்னை
வருகிற 19-ந்தேதி முதல் வகுப்புகள் தொடங்க இருக்கும் நிலையில் நடப்பு கல்வியாண்டில் ஆன்லைன் மூலமாக முழுப்பாடங்களையும் நடத்தி முடிக்க முடியாத காரணத்தினால், பாடங்கள் எதுவும் குறைக்கப்படுமா? என்று கேள்வி எழுந்தது. அதன்படி கல்வித்துறையும்,‘9-ம் வகுப்பு வரையில் உள்ள வகுப்புகளுக்கு 50 சதவீதம் பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளன என்றும், 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மற்ற மாநில மாணவர்களுடன் போட்டிப்போட வேண்டும் என்ற அடிப்படையில் 35 சதவீதம் பாடங்கள் குறைக்கப்படும் என்றும் அறிவித்தது.
அவ்வாறு குறைக்கப்பட்ட பாடங்கள் எவை-எவை? என்பது குறித்த அறிவிப்பு எப்போது வெளியிடப்படும்? என்பது தொடர்ந்து பெரும் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. பள்ளிகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கும் நிலையில், குறைக்கப்பட்ட பாடங்கள் எவை? என்பதற்கான தகவல்களையும் உடனே வெளியிட பெற்றோரும், கல்வியாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு மார்ச், ஏப்ரல் மாதங்களில் வழக்கமாக நடைபெறும். இந்த நிலையில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால், தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான பிறகே, 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 19-ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இதையடுத்து பள்ளிகளுக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
* பள்ளிக்கு வரும் மாணவர்கள் பெற்றோரிடம் கடிதம் பெற்று வரவேண்டும்.
* தனியார் பள்ளிகள் திறப்பதற்கு முன் அனுமதி பெற வேண்டும்.
* வகுப்பறைக்கு உள்ளே, வெளியே முகக்கவசம் அணிவது கட்டாயம்.
* வாரத்தின் ஆறு நாட்கள் பள்ளிகள் செயல்படும்.
* ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும்.
* 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் விரும்பினால் பள்ளிக்கு வரலாம்.
* பெற்றோரின் சம்மதத்துடன் மாணவர்கள் வீட்டிலிருந்தே படிக்கலாம்.