மாநில செய்திகள்

தஞ்சாவூரில் மின்கம்பி உரசி 4 பேர் உயிரிழந்த விவகாரம்: மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் + "||" + 4 killed in Thanjavur power outage: State Human Rights Commission notice

தஞ்சாவூரில் மின்கம்பி உரசி 4 பேர் உயிரிழந்த விவகாரம்: மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

தஞ்சாவூரில் மின்கம்பி உரசி 4 பேர் உயிரிழந்த விவகாரம்: மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்
தஞ்சாவூரில் மின்கம்பி உரசி 4 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
தஞ்சாவூர், 

திருக்காட்டுப்பள்ளியில் இருந்து தஞ்சாவூர் நோக்கி நேற்று காலை சென்ற தனியார் பேருந்து எதிர்பாராத விதமாக மின்கம்பியின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணித்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். பேருந்தில் இருந்த 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில், 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவமனையில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்நிலையில் தஞ்சாவூரில், மின்கம்பி மீது பேருந்து உரசிய விபத்தில் நான்கு பேர் பலியான சம்பவம் தொடர்பாக, டான்ஜெட்கோ தலைவர், தஞ்சை கண்காணிப்பு பொறியாளர் அறிக்கை அளிக்க, மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னதாக பத்திரிக்கை செய்தியின் அடிப்படையில் தாமாக முன்வந்து மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை மேற்கொண்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தஞ்சாவூர் மாவட்டத்தில் 3 கடன் செயலிகள் மீது வழக்குப்பதிவு
அதிக வட்டிக்கு கடன் வழங்கி மிரட்டல் விடுத்தாக திருவையாறு காவல்நிலையத்தில் 3 கடன் செயலிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
2. தஞ்சையில் தொழிலாளர் சட்ட தொகுப்பு நகல் எரிப்பு போராட்டம்
தொழிலாளர்களுக்கு எதிரான சட்ட திருத்தத்தை ரத்து செய்ய கோரி அனைத்து தொழிற்சங்கத்தினர், தொழிலாளர் சட்ட தொகுப்பு நகலை எரித்து போராட்டம் நடத்தினர்.
3. தஞ்சாவூரில் மின்கம்பியில் தனியார் பேருந்து உரசிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
தஞ்சாவூரில் மின்கம்பியில் தனியார் பேருந்து உரசிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
4. தஞ்சாவூர், திருவாரூர் மாவட்ட நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் கலந்துரையாடல்
தஞ்சாவூர், திருவாரூர் மாவட்ட நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் கலந்துரையாடினார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை