மாநில செய்திகள்

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகையை விரைவில் வழங்க நடவடிக்கை: முதலமைச்சர் பழனிசாமி + "||" + Action to provide compensation to farmers affected by rains soon: Chief Minister Palanisamy

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகையை விரைவில் வழங்க நடவடிக்கை: முதலமைச்சர் பழனிசாமி

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகையை விரைவில் வழங்க நடவடிக்கை: முதலமைச்சர் பழனிசாமி
மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகையை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை, 

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையால், மாவட்டத்தில் உள்ள பிரதான அணைகள் முழுக்கொள்ளளவை எட்டி உள்ளன. இதன்படி பாபநாசம், மணிமுத்தாறு, கடனா, ராமாநதி சேர்வலாறு அணைகளிலிருந்து உபரிநீர் திறக்கப்பட்டு வருவதால் 60,000 கனஅடி நீர் தாமிரபரணியில் ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகின்றது. இதனால் அங்கு வசிக்கும் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசின் சார்பில் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுக்க போர்க்கால அடிப்படையில் செயல்பட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகையை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள தூத்துக்குடி, தென்காசி, நெல்லை மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை துரிதப்படுத்தவும் முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.தொடர்புடைய செய்திகள்

1. தூத்துக்குடியில் மழை நீரை அகற்றும் பணி தீவிரம்
தூத்துக்குடியில் மழை நீரை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
2. கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் தொடர் மழை: அறுவடைக்கு தயாரான திராட்சை பழங்கள் அழுகின; கிலோ ரூ.10-க்கு வாங்க ஆளில்லை
கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் பெய்த தொடர் மழைக்கு அறுவடைக்கு தயாராக இருந்த திராட்சை பழங்கள் அழுகின. இதனால் கிலோ ரூ.10-க்கு வாங்க ஆளில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
3. சேரன்மாதேவி அருகே மழைக்கு வீடு இடிந்து 2 பேர் பலி
நெல்லை அருகே மழைக்கு வீடு இடிந்து 2 பேர் பலியானார்கள்.
4. மழையால் விவசாயிகள் பாதிப்பு: நிவாரணம் வழங்க கி.வீரமணி வலியுறுத்தல்
மழையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கி.வீரமணி வலியுறுத்தி உள்ளார்.
5. காரைக்குடி பகுதியில் விடிய, விடிய பெய்த மழை; வீடுகள் இடிந்தன - கணவன்-மனைவி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
காரைக்குடி பகுதியில் இரவு முதல் விடிய, விடிய பலத்த மழை பெய்ததில் 2 வீடுகள் இடிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த கணவன்-மனைவி உயிர் தப்பினர்.