மாநில செய்திகள்

தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல் + "||" + Chance of rain for 3 days in Tamil Nadu - Meteorological Center Information

தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
குமரிக்கடலை ஒட்டி காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியிருப்பதால் தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) முதல் 3 நாட்களுக்கு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நிறைவடையும் தருவாயில் இருக்கிறது. வழக்கமாக அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை இருக்கும். ஆனால் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை 12-ந்தேதி வரை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில், தற்போது 16-ந்தேதி வரை சில இடங்களில் மழைக்கான வாய்ப்பு இருக்கிறது.

அந்த வகையில் வளிமண்டலத்தில் நிலவி வந்த மேலடுக்கு சுழற்சி, தற்போது மாலத்தீவு மற்றும் குமரிக்கடல் பகுதியை ஒட்டி காற்றழுத்த தாழ்வு நிலையாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தென் கடலோர மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் லேசான மழையும் இன்றும் (வியாழக்கிழமை) , நாளையும் (வெள்ளிக்கிழமை) பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் இந்த நாட்களில் வறண்ட வானிலையே நிலவும்.

அதேபோல், நாளை மறுதினம் (சனிக்கிழமை) தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. அதற்கு அடுத்த நாள் (17-ந்தேதி) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிகழும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறி இருக்கின்றனர்.

தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், 'ஓரிரு இடங்களில் அதிக கனமழையும், ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்திருக்கிறது. அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் 28 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக சேத்தியாத்தோப்பு 21 செ.மீ., புவனகிரி 20 செ.மீ., பாபநாசம் 19 செ.மீ., மணிமுத்தாறு 17 செ.மீ., சிதம்பரம் 16 செ.மீ., பெலந்தூரை 14 செ.மீ., சீர்காழி 12 செ.மீ., திருவிடைமருதூர் 11 செ.மீ., அம்பாசமுத்திரம், விருதாச்சலம் தலா 10 செ.மீ. உள்பட பெரும்பாலான இடங்களில் மழை பெய்து இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகம் மின்மிகு மாநிலமாக திகழ்கிறது என்று கோவையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்
தமிழகம் மின்மிகு மாநிலமாக திகழ்கிறது என்று கோவையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதத்துடன் கூறினாார்.
2. தமிழகத்தில் 5 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
3. தமிழகத்தில் 9, 10, 11-ம் வகுப்பு பள்ளி மாணவர்கள் ஆல் பாஸ் - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு
தமிழகத்தில் 9, 10, 11-ம் வகுப்பு பள்ளி மாணவர்கள் ஆல் பாஸ் என்று முதலமைச்சர் பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
4. தமிழகத்தில் ஒரே நாளில் 14,043 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது - சுகாதாரத்துறை
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 14,043 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
5. தமிழகத்தில் இதுவரை கொரோனா தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியது - சுகாதாரத்துறை தகவல்
தமிழகத்தில் இதுவரை கொரோனா தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டி உள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.