மாநில செய்திகள்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை காண திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வருகை + "||" + DMK Youth Secretary Udayanithi Stalin visits Avaniyapuram Jallikattu

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை காண திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வருகை

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை காண திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வருகை
ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் காண திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவனியாபுரம் வந்தார்.
மதுரை,

உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் 788 காளைகளும், 430 மாடுபிடி வீரர்களும் பங்கேற்கின்றனர். ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் மிகுந்த கவனத்தோடு செய்யப்பட்டுள்ளன.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் காண மாவட்ட ஆட்சியர், அமைச்சர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் பிரமுகர்கள் அவனியாபுரத்திற்கு வந்துள்ளனர். அந்த வகையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் காண அவனியாபுரம் வந்தார்.

அங்குள்ள பார்வையாளர்கள் பகுதியில் இருந்து ஜல்லிக்கட்டு போட்டியை அவர் பொதுமக்களுடன் இணைந்து கண்டு மகிழ்ந்தார். இதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் காண வரவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : 26 காளைகளை அடக்கியதிருநாவுக்கரசு விஜய் சிறந்த மாடுபிடி வீரர்களாக தேர்வு
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 26 காளைகளை அடக்கிய திருநாவுக்கரசு விஜய் சிறந்த மாடுபிடி வீரர்களாக தேர்வு பெற்றனர்.
2. அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் காளைகளை அவிழ்த்து விடுவதில் உரிமையாளர்களுக்கு இடையே மோதல் 2 பேருக்கு கத்திகுத்து
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் காளைகளை அவிழ்த்து விடுவதில் உரிமையாளர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் 2 பேருக்கு கத்திகுத்து விழுந்தது.
3. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் காண ராகுல் காந்தி வருகை
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் காண காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வருகை தந்துள்ளார்.
4. உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது - 788 காளைகள் பங்கேற்பு
உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கு 430 மாடுபிடி வீரர்கள் உடல்தகுதியுடன் தேர்வாகியுள்ளனர்.
5. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாவைக் காண ராகுல்காந்தி இன்று தனி விமானத்தில் மதுரை வருகை
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாவைக் காண காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இன்று தனி விமானம் மூலம் மதுரை வருகிறார்.