மாநில செய்திகள்

பொங்கல் விழாவில் மக்களோடு அமர்ந்து உணவருந்தினார் ராகுல்காந்தி + "||" + Rahul Gandhi participated in Pongal festival and had lunch with people

பொங்கல் விழாவில் மக்களோடு அமர்ந்து உணவருந்தினார் ராகுல்காந்தி

பொங்கல் விழாவில் மக்களோடு அமர்ந்து உணவருந்தினார் ராகுல்காந்தி
அவனியாபுரம் ஜல்லிக்கட்டை பார்வையிட்ட பிறகு பொங்கல் கொண்டாட்டத்தில் ராகுல்காந்தி கலந்துகொண்டார்.
மதுரை,

மதுரை அவனியாபுரத்தில் நடைபெறும் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் காண்பதற்காக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று மதுரை வந்தார். மதுரை விமான நிலையத்திற்கு தனி விமானம் முலம் வந்திறங்கிய ராகுல் காந்தி, பின்னர் சாலை மார்க்கமாக அவனியாபுரம் சென்றடைந்தார்.

அவருடன் காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, மாணிக்கம் தாகூர் எம்.பி. உள்ளிட்டோர் வருகை தந்தனர். மேலும் திமுக இளைஞரணி செயலாள்ர் உதயநிதி ஸ்டாலின் ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்வையிடுவதற்காக வந்திருந்தார். பின்னர் ஒரே மேடையில் அமர்ந்து அவர்கள் அனைவரும் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு ரசித்தனர்.

இதை தொடர்ந்து மதுரை தென்பலன்ஞ்சி கிராமத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அங்கு கிராம மக்கள் அனைவரும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்குள்ள மக்களிடம் பொங்கல் விழாவின் சிறப்புகள் குறித்து தெரிந்து கொண்ட அவர், அங்கு நடைபெற்ற சமபந்தி விருந்தில் மக்களுடன் ஒன்றாக அமர்ந்து உணவருந்தினார். மேலும் அங்குள்ள மக்களிடம் உரையாடி நலம் விசாரித்தார். இதையடுத்து அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. லூர்து அன்னை ஆலயத்தில் பொங்கல் விழா
லூர்து அன்னை ஆலயத்தில் பொங்கல் விழா நடந்தது
2. பொங்கல் விழா - துக்ளக் ஆண்டு விழாவில் பங்கேற்க சென்னை வந்தார் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா
பொங்கல் விழா மற்றும் துக்ளக் ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா சென்னை வந்தார்