மாநில செய்திகள்

சொந்த ஊரில் பொங்கல் பண்டிகையை கொண்டாடிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி + "||" + In hometown Celebrating the Pongal festival Chief Minister Edappadi Palanisamy

சொந்த ஊரில் பொங்கல் பண்டிகையை கொண்டாடிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சொந்த ஊரில் பொங்கல் பண்டிகையை கொண்டாடிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சொந்த ஊரில் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்
சேலம்:

2 நாள் பயணமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் சென்றுள்ளார். . முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்.
அங்குள்ள முருகன் கோயிலில் வழிபாடு நடத்திய முதலமைச்சர் குடும்பத்தினர், பொதுமக்களுடன் இணைந்து பொங்கலை கொண்டாடினார்.

விழாவில் கலந்து கொண்ட பொதுமக்கள், அதிமுக நிர்வாகிகளுக்கு பொங்கல் மற்றும் இனிப்புகளை வழங்கிய முதலமைச்சர் பொங்கல் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.

பின்னர், சப்பானிப்பட்டி என்ற கிராமத்தில் அருந்ததியர் காலனியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் கலந்து கொண்டார், அங்கு, பெண்கள், பொங்கல் வைத்து வழிபட்டனர்.

சக்தி மாரியம்மன்ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜையிலும் முதலமைச்சர் கலந்து கொண்டார், பிறகு பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தாமும் அமர்ந்து உணவு சாப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. பொங்கல் பண்டிகையையொட்டி கடையில் வாங்கி வந்த இனிப்பு சாப்பிட்ட அக்காள், தம்பி உயிரிழப்பு
பொங்கல் பண்டிகையையொட்டி கடையில் வாங்கி வந்த இனிப்பு சாப்பிட்ட அக்காள்-தம்பி பரிதாபமாக உயிரிழந்தனர்.
2. பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் 3 நாட்களில் ரூ.589 கோடிக்கு மது விற்பனை
பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசின் டாஸ்மாக் கடைகளில் 3 நாட்களில் ரூ.589 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.
3. பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்கம்: போக்குவரத்து துறைக்கு ரூ.5½ கோடி வருவாய்
பொங்கல் பண்டிகையையொட்டி இயக்கப்பட்ட சிறப்பு பஸ்கள் மூலம் 5 லட்சத்து 6 ஆயிரத்து 721 பயணிகள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இதன் மூலம் ரூ.5 கோடியே 46 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
4. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2 நாட்களில் ரூ.417 கோடிக்கு மது விற்பனை
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 2 நாட்களில் தமிழகத்தில் 417 கோடி ருபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது.
5. தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்
தமிழகம் முழுவதும் இன்று பொங்கல் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டுவருகிறது.