டான்செட் நுழைவுத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 18 Jan 2021 9:22 PM GMT (Updated: 18 Jan 2021 9:22 PM GMT)

டான்செட் நுழைவுத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை, 

எம்.பி.ஏ., எம்.சி.ஏ, மற்றும் எம்.இ., எம் டெக், எம்.ஆர்க்., எம் பிளான் போன்ற படிப்புகளில் மாணவ-மாணவிகள் சேருவதற்கு அண்ணா பல்கலைக்கழகம் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு என அழைக்கப்படும் டான்செட் தேர்வை நடத்தி வருகிறது. அந்தவகையில் 2021-22- ம் கல்வி ஆண்டுகளில் மேற்சொன்ன படிப்புகளில் சேருவதற்கு டான்செட் என்ற நுழைவுத்தேர்வு நடத்தப்பட இருக்கிறது. 

அதன்படி வருகிற மார்ச் மாதம் 20, 21- ந் தேதிகளில் இந்த தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வை எழுத விருப்பம் உள்ளவர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் விண்ணப்ப பதிவு செய்யலாம். விண்ணப்ப பதிவு செய்வதற்கான கடைசி தேதி அடுத்த மாதம் (பிப்ரவரி) 12- ந் தேதி ஆகும். 

விண்ணப்பதாரர்கள் https://tancet.annauniv.edu/tancet என்ற இணைய தளம் மூலம் ஆன்லைன் வழியாகவே விண்ணப்ப பதிவு செய்ய முடியும். இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு 044-22358289 என்ற தொலைபேசி எண்ணில் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

மேற்கண்ட தகவல் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story