இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
இன்று பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து லிட்டருக்கு 22 காசுகள் அதிகரித்துள்ளது.
சென்னை,
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில் பெட்ரோல், டீசல் விலை தினமும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க மார்ச் இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல் அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.
சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 87.63 ரூபாய், டீசல் லிட்டர் 80.43 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில், பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து லிட்டருக்கு 22 காசுகள் அதிகரித்து 87.85 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டருக்கு 24 காசுகள் அதிகரித்து 80.67 ரூபாய்க்கும் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story