தமிழகத்தில் இதுவரை 25 ஆயிரத்து 908 சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி + "||" + Corona vaccination for 25 thousand 908 health workers in Tamil Nadu so far
தமிழகத்தில் இதுவரை 25 ஆயிரத்து 908 சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி
தமிழகத்தில் இதுவரை 25 ஆயிரத்து 908 சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் நேற்று 172 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. அந்த வகையில் 17 ஆயிரத்து 200 பேருக்கு செலுத்த தடுப்பு மருந்து தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று 9 ஆயிரத்து 305 சுகாதாரப் பணியாளர்கள் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்தும், 141 பேர் ‘கோவேக்சின்’ என மொத்தம் 9 ஆயிரத்து 446 பேர் தடுப்பு மருந்தும் செலுத்திக்கொண்டனர். இது 54.92 சதவீதம் ஆகும்.
தமிழகத்தில் இதுவரை 25 ஆயிரத்து 280 பேர் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்தும், 628 பேர் ‘கோவேக்சின்’ தடுப்பு மருந்தும் என மொத்தம் 25 ஆயிரத்து 908 சுகாதாரப் பணியாளர்கள் தடுப்பு மருந்து செலுத்தி உள்ளனர்.
வளிமண்டலத்தின் மேலடுக்கில் நிலவும் சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை), நாளையும் (திங்கட்கிழமை) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.