மாநில செய்திகள்

103 கிலோ தங்கம் திருட்டுபோன வழக்கு: சி.பி.ஐ. போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை + "||" + 103 kg gold theft case: CBI C.P.C.I.D. to the Police Inspector. Police investigation

103 கிலோ தங்கம் திருட்டுபோன வழக்கு: சி.பி.ஐ. போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை

103 கிலோ தங்கம் திருட்டுபோன வழக்கு: சி.பி.ஐ. போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை
சென்னையில் 103 கிலோ தங்கம் திருட்டுபோன வழக்கில் சி.பி.ஐ. போலீஸ் இன்ஸ்பெக்டரிடம், சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிரடி விசாரணை நடத்தினார்கள்.
சென்னை,

சென்னை பாரிமுனையில் செயல்படும் தனியார் தங்க ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தில் கடந்த 2012-ம் ஆண்டு சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின் போது, குறிப்பிட்ட தனியார் நிறுவனத்தில் 400.47 கிலோ தங்கத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட அந்த தங்கம், அதே குறிப்பிட்ட நிறுவனத்தில் உள்ள பாதுகாப்பு லாக்கரில் பத்திரமாக வைக்கப்பட்டு, சீல் வைக்கப்பட்டது. அந்த லாக்கரின் 72 சாவிகள் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் குறிப்பிட்ட லாக்கரை திறந்து பார்த்தபோது, 400.47 கிலோ தங்கத்தில், 103.864 கிலோ தங்கம் மாயமாகிவிட்டது.

இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், இதுபற்றி சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அதன் பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில், தனிப்படை போலீசார் திருட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

லாக்கரில் வைக்கப்பட்ட 400.47 கிலோ தங்கத்தை பாதுகாக்க சென்னை ஐகோர்ட்டு, ராமசுப்பிரமணியன் என்ற பொறுப்பு அதிகாரியை நியமித்தது. அவர்தான் தங்கம் காணாமல் போனதை கண்டுபிடித்தார். அவர் கொடுத்த புகார் அடிப்படையில்தான் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தங்கம் பாதுகாப்பு பொறுப்பு அதிகாரி ராமசுப்பிரமணியன் மற்றும் தங்கம் திருட்டு போன நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனர் ஆகியோரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். திருட்டு போன தங்கம் வைக்கப்பட்டிருந்த லாக்கர் கள்ளச்சாவி மூலம் திறக்கப்பட்டதா? அல்லது லாக்கர் உடைக்கப்பட்டதா? என்பது பற்றி தடய அறிவியல் துறை அதிகாரிகளும் ஆய்வு செய்துள்ளனர்.

சி.பி.சி.ஐ.டி. போலீசார், சி.பி.ஐ. முன்னாள் போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. ஒருவரிடம் ஏற்கனவே விசாரணை நடத்தி உள்ளனர். நேற்று சி.பி.ஐ. போலீஸ் இன்ஸ்பெக்டர் மாணிக்கவேலு என்பவரிடம், காலையில் இருந்து மாலை வரை விசாரணை நடத்தினார்கள். சி.பி.ஐ. போலீஸ் டி.எஸ்.பி. ஒருவரையும், இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு ஆஜராகுமாறு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. 12 இந்தியர்கள் பலியான பஸ் விபத்து வழக்கு: டிரைவருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ஒரு ஆண்டாக குறைப்பு துபாய் கோர்ட்டு உத்தரவு
ஓமன் நாட்டின் மஸ்கட் நகரில் இருந்து துபாய் நகருக்கு வந்த பயணிகள் பஸ் கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் 6-ந் தேதி சாலையின் தகவல் பலகையின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து ஷேக் முகம்மது பின் ஜாயித் சாலையில் ஏற்பட்டது. மொத்தம் 17 பயணிகள் இந்த விபத்தில் பலியானார்கள்.
2. டெல்லி செங்கோட்டை முற்றுகை வழக்கு: நடிகர் தீப் சித்துக்கு 14 நாள் நீதிமன்ற காவல் - டெல்லி கோர்ட் உத்தரவு
டெல்லி செங்கோட்டை முற்றுகை வழக்கில், நடிகர் தீப் சித்துக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதித்து டெல்லி கோர்ட் உத்தரவிட்டது.
3. 7 பேர் கொலை வழக்கு: தாயாரின் மரண தண்டனையை குறைக்க மகன் வேண்டுகோள்
சொந்த குடும்பத்தினர் 7 பேரை கொன்ற வழக்கில் தாயாரின் மரண தண்டனையை குறைக்கும்படி மகன், ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
4. சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிரான சதி வழக்கு முடித்து வைப்பு
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் இருந்தபோது, சுப்ரீம் கோர்ட்டில் பணியாற்றிய பெண் ஒருவர் அவருக்கு எதிராக கடந்த 2019-ம் ஆண்டு பாலியல் புகார் தெரிவித்திருந்தார்.
5. நிலுவையில் உள்ள டெண்டர் முறைகேடு வழக்கு: அமைச்சர் வேலுமணிக்கு எதிராக இருப்பதாக கருதக்கூடாது ஐகோர்ட்டு கருத்து
ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ள டெண்டர் முறைகேடு வழக்கு, உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணிக்கு எதிராக இருப்பதாக கருதக்கூடாது என்று ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.