மாநில செய்திகள்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது + "||" + DMK district secretaries meeting is being held today at Anna Arivalayam, Chennai

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளன. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் தேர்தலுக்கான ஆக்கப்பணிகள் குறித்து தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று (வியாழக்கிழமை) அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது. இதில் திமுக போட்டியிடும் தொகுதிகள், தேர்தல் கூட்டணி மற்றும் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

 இது தொடர்பாக தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று (வியாழக்கிழமை) சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நடைபெறும். இதில் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். கூட்டத்தில் கழகத்தின் ஆக்கப்பணிகள் குறித்து ஆலோசிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. சட்டசபையில் இன்று இடைக்கால பட்ஜெட்; துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்
தமிழக சட்டசபையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். அதில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு இருக்கிறது.
2. நாடு முழுவதும் ஜேஇஇ முதல்நிலைத் தேர்வுகள்: இன்று தொடக்கம்
நாடு முழுவதும் 2021-ம் ஆண்டுக்கான ஜேஇஇ முதல்நிலைத் தேர்வுகள் இன்று தொடங்குகிறது.
3. இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு: இன்று புதிதாக 14,264 பேருக்கு தொற்று உறுதி
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,264 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. மக்கள் நீதி மய்யம் கட்சியில் இன்று விருப்ப மனு தாக்கல்
மக்கள் நீதி மய்யம் கட்சியில் இன்று விருப்ப மனு தாக்கல் நடைபெற உள்ளது.
5. பிரதமர் மோடி தலைமையில் இன்று ‘நிதி ஆயோக்’ கூட்டம்
பிரதமர் மோடி தலைமையில் இன்று நிதி ஆயோக் ஆட்சி மன்ற குழு கூட்டம் நடக்கிறது.