அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


கரூரில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது எடுத்த படம்
x
கரூரில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது எடுத்த படம்
தினத்தந்தி 21 Jan 2021 10:00 PM GMT (Updated: 21 Jan 2021 5:30 PM GMT)

கரூரில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர்:

கரூர் வாங்கப்பாளையத்தில் மாவட்ட தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கரூர் ஒன்றிய தலைவர் ராணி தலைமை தாங்கினார். செயலாளர் மணிமேகலை முன்னிலை வகித்தார். மாநில தலைவர் ரத்தினமாலா சிறப்புரையாற்றினார். இதில் சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் ஜீவானந்தம், அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் பொன்.ஜெயராம், அங்கன்வாடி கரூர் மாவட்ட பொருளாளர் கலா உள்பட பலர் கலந்து கொண்டனர். அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் அனைவரையும் அரசு ஊழியராக்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியம் மற்றும் முறையான குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். மேலும், பணி ஓய்வு பெறுகின்றபோது பணிக்கொடையாக அங்கன்வாடி ஊழியர்களுக்கு ரூ.10 லட்சமும், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சமும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

Next Story