மாநில செய்திகள்

தங்கம் விலை பவுனுக்கு ரூ.192 உயர்வு + "||" + Gold price rises by Rs 192 per pound

தங்கம் விலை பவுனுக்கு ரூ.192 உயர்வு

தங்கம் விலை பவுனுக்கு ரூ.192 உயர்வு
நேற்றைய நிலவரப்படி ஒரு பவுன் ரூ.37 ஆயிரத்து 208-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
சென்னை,

தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து உயர்ந்து கொண்டே வந்தது. அதன்பின்னர், கடந்த 7-ந்தேதிக்கு பிறகு விலை குறையத் தொடங்கி, கடந்த 17-ந்தேதி ஒரு பவுன் ரூ.37 ஆயிரத்துக்கு கீழ் சென்றது. அதற்கு அடுத்த நாளில் இருந்து மீண்டும் தங்கம் விலை உயரத் தொடங்கியுள்ளது. அதன்படி, நேற்றும் தங்கம் விலை அதிகரித்துதான் காணப்பட்டது.

நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 651-க்கும், ஒரு பவுன் ரூ.37 ஆயிரத்து 208-க்கும் விற்பனை ஆனது. நேற்று மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.24-ம், பவுனுக்கு ரூ.192-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 675-க்கும், ஒரு பவுன் ரூ.37 ஆயிரத்து 208-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் விலையை போலவே, வெள்ளி விலையும் உயர்ந்துதான் காணப்பட்டது. நேற்று கிராமுக்கு 1 ரூபாய் 10 காசும், கிலோவுக்கு ரூ.1,100-ம் உயர்ந்து, ஒரு கிராம் 72 ரூபாய் 40 காசும், ஒரு கிலோ ரூ.72 ஆயிரத்து 400-க்கும் விற்பனை ஆனது.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னை விமான நிலையத்தில் ரூ.37 லட்சம் தங்கம் பறிமுதல்
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன்சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.
2. சென்னை விமான நிலையத்தில் ரூ.72 லட்சம் தங்கம் பறிமுதல் ரூ.7½ லட்சம் வெளிநாட்டு பணமும் சிக்கியது
சென்னை விமான நிலையத்தில் ரூ.72 லட்சம் மதிப்புள்ள 1½ கிலோ தங்கம் மற்றும் ரூ.7½ லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
3. இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.264 உயர்வு
இன்றைய நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் ரூ.4,428-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
4. இன்று பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு 31 காசுகள் அதிகரித்துள்ளது.
5. இன்று மீண்டும் உயர்ந்தது பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 34 காசுகள் உயர்ந்து 92.59 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதிகம் வாசிக்கப்பட்டவை