மாநில செய்திகள்

பெண்களை இழிவுப்படுத்தி பேசிய ‘உதயநிதியை, மு.க.ஸ்டாலின் கண்டிக்காதது ஏன்?’ - எடப்பாடி பழனிசாமி கேள்வி + "||" + Edappadi Palanisamy Questions Why MK Stalin did not condemn Udayanidhi for insulting women?

பெண்களை இழிவுப்படுத்தி பேசிய ‘உதயநிதியை, மு.க.ஸ்டாலின் கண்டிக்காதது ஏன்?’ - எடப்பாடி பழனிசாமி கேள்வி

பெண்களை இழிவுப்படுத்தி பேசிய ‘உதயநிதியை, மு.க.ஸ்டாலின் கண்டிக்காதது ஏன்?’ - எடப்பாடி பழனிசாமி கேள்வி
உதயநிதி ஸ்டாலின் பெண்களை இழிவுப்படுத்தி பேசியதை மு.க.ஸ்டாலின் கண்டிக்காதது ஏன்? என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
சென்னை,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

உதயநிதி ஸ்டாலின், நாங்கள் ஆட்சிக்கு வந்தால்... என்று போலீஸ் உயர் அதிகாரியையே மிரட்டுகிறார். உயர்பதவியில் இருக்கும் அதிகாரிகளையே மிரட்டுகிறார் என்றால், சாதாரண மக்களின் நிலைமையை எண்ணிப்பார்க்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மத்திய அரசிடம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். அதையும் மு.க.ஸ்டாலின் கிண்டலாக பேசுகிறார்.

எடப்பாடி பழனிசாமி, ஆட்சியை காப்பாற்றுவதற்காக பிரதமர் மற்றும் உள்துறை மந்திரியை பார்த்தார் என்று சொல்கிறார். ஆட்சியை காப்பாற்றுவதற்கு இன்னும் 5 ஆண்டுகளா இருக்கிறது?. இன்னும் 2 மாதங்களில் தேர்தல் வர இருக்கிறது. நல்ல எண்ணமே கிடையாது அவருக்கு.

அவருடைய தந்தை கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது டெல்லிக்கு எப்போது செல்வார் என்றால் தன் குடும்பத்தை சேர்ந்த உறுப்பினர்களுக்கு பதவி, அதிகாரம் வேண்டும் என்பதற்குதான் செல்வார். நாட்டு மக்களின் பிரச்சினைக்காக டெல்லி செல்வாரா என்றால், கிடையவே கிடையாது.

நாங்கள் ஆட்சியை பெரிதாக நினைக்கவில்லை. மக்களைதான் பெரிதாக நினைக்கிறோம். மக்கள்தான் எஜமானர்கள். மக்கள்தான் ஆட்சியை ஏற்படுத்துகிறார்கள். எனவே, ஆட்சியை கொண்டு வந்த மக்களுக்கு எங்களால் இயன்ற அளவுக்கு நன்மைகளை செய்து கொண்டே இருப்போம். செய்வோம்,

தி.மு.க. கட்சியல்ல அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி. அந்த கம்பெனியில் ஸ்டாலின் சேர்மன், குடும்ப உறுப்பினர்கள்தான் டைரக்டர்கள். வேறு யாரையும் டைரக்டராக போட மாட்டார்கள். அவர்கள் குடும்ப உறுப்பினர்கள்தான் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். ஸ்டாலின் போகிறார், உதயநிதி போகிறார், கனிமொழி போகிறார், தயாநிதி மாறன் போகிறார். மற்றவர்கள் யாரும் தி.மு.க.விலே இல்லை பாருங்கள். நிலைமையை பாருங்கள்.

அ.தி.மு.க.வை பொறுத்தவரைக்கும் சாதாரண தொண்டன் கூட முதல்-அமைச்சராக வர முடியும். இது ஒரு ஜனநாயக கட்சி. யார் உழைக்கிறார்களோ, யார் தலைமைக்கு விசுவாசமாக இருக்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக ஏதாவது பதவியை அடைந்தே தீருவார்கள். வேறு எந்த கட்சியிலாவது வர முடியுமா?.

ஒரு வேதனையான விஷயம். மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் மற்றும் துணை முதல்-அமைச்சர் தொகுதியான எடப்பாடி மற்றும் தேனியில் பெண்களை வைத்து மக்கள் கிராம சபை கூட்டம் என்ற ஒன்றை நடத்தி வருகிறார். எவ்வளவு திட்டமிட்டு செயல்படுகிறார் என்று பாருங்கள். அங்கே போய் அமர்ந்து கொண்டு, அங்கு இருக்கிற பெண்களுக்கு துணை முதல்-அமைச்சர் மீது குற்றச்சாட்டை சொல்ல சொல்கிறார்.

கொரோனா ‘லாக்டவுன்’ காலக்கட்டத்தில் தமிழகத்திற்கு வர முடியாமல் டெல்லியில் சிக்கி தவித்த சுமார் 400 இஸ்லாமிய பெருமக்களை தன்னுடைய சொந்த செலவில் ரெயிலிலே அழைத்து வந்து அவர்களை வரவேற்று அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளித்த தலைவர் ஓ.பன்னீர்செல்வம். கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட காலக்கட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவுகளை வழங்கினார். அங்கே ஒரு பெண்மணி ஒரு தவறான கருத்தை சொல்லி, மு.க.ஸ்டாலின் அதற்கு பதில் சொல்லி கொண்டிருக்கிறார்.

இதன்மூலம் அரசியல் ஆதாயம் பார்க்க நினைக்கிறார் மு.க.ஸ்டாலின். நேருக்கு நேர் அரசியலில் மோதிப்பார். அப்பாவி மக்களை வைத்து அவர்களை பேச வைத்து மோத வேண்டாம். அ.தி.மு.க. எக்கு கோட்டை, இதில் மோதினால் மண்டைதான் உடையும். மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி கூட்டத்தில் பேசுகின்ற போது பெண்களை இழிவுப்படுத்தி பேசுகிறார்.

அதை நீங்கள் கண்டித்தீர்களா? உதயநிதி பேசிய பேச்சு பெண் குலத்தையே இழிவுப்படுத்துகின்ற பேச்சு. வீண் பழி சுமத்தி, ஆட்சிக்கு வர துடிக்கிறார்கள். அவர்களுக்கு சரியான அடியை இந்த தேர்தலில் மக்கள் கொடுக்க வேண்டும். பொய் பேசி ஆட்சிக்கு வர துடிப்பவர்களுக்கு இந்த தேர்தல் ஒரு பாடமாக அமைய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் ஆய்வு - நல உதவிகளை வழங்கினார்
கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து, நல உதவிகளை வழங்கினார்.
2. வத்தலக்குண்டுவில் மு.க.ஸ்டாலின் உருவபொம்மையை எரிக்க முயற்சி - தி.மு.க.வினர் எதிர் கோஷமிட்டதால் பரபரப்பு
வத்தலக்குண்டுவில் பாரதீய பார்வர்டு பிளாக் கட்சியினர் மு.க.ஸ்டாலின் உருவபொம்மையை எரிக்க முயன்றனர். இதை கண்டித்து தி.மு.க.வினர் திரண்டு வந்து எதிர்கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.