மாநில செய்திகள்

தைப்பூச திருவிழா; பழனிக்கு 350 சிறப்பு பஸ்கள் - அதிகாரி தகவல் + "||" + 350 special buses to Palani for Thaipusam festival - official information

தைப்பூச திருவிழா; பழனிக்கு 350 சிறப்பு பஸ்கள் - அதிகாரி தகவல்

தைப்பூச திருவிழா; பழனிக்கு 350 சிறப்பு பஸ்கள் - அதிகாரி தகவல்
தைப்பூச திருவிழாவையொட்டி பழனிக்கு 350 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது என்று அதிகாரி தகவல் தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல், 

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி வருகிற 31-ந்தேதி வரை நடக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தைப்பூச தேரோட்டம் வருகிற 28-ந்தேதி நடக்கிறது.

இதையொட்டி திண்டுக்கல், மதுரை, திருச்சி, காரைக்குடி, நத்தம், புதுக்கோட்டை, தேனி, கரூர், ஈரோடு, கோவை, திருப்பூர் ஆகிய ஊர்களில் இருந்து பழனிக்கு பக்தர்கள் வருகை தருவார்கள். இவ்வாறு வரும் பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திண்டுக்கல் மண்டலம் சார்பில் வருகிற 25-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை மேற்குறிப்பிட்ட இடங்களில் இருந்து பழனிக்கும், பழனியில் இருந்து மேற்குறிப்பிட்ட இடங்களுக்கும் 350 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. 

இந்த தகவலை, மதுரை அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் முருகேசன் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா
பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
2. கரூர் மாவட்ட முருகன் கோவில்களில் தைப்பூச திருவிழா கோலாகலம்
கரூர் மாவட்ட முருகன் கோவில்களில் தைப்பூச திருவிழா கோலாகலமாக நடந்தது. குளித்தலையில் 8 ஊர் சுவாமிகள் சந்திப்பு மற்றும் தீர்த்தவாரி நடந்தது.
3. தைப்பூச திருவிழா: மருதமலை முருகன் கோவிலில் இன்று திருக்கல்யாணம்
தைப்பூச திருவிழாவையொட்டி மருதமலை முருகன் கோவிலில் இன்று திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதில் பக்தர்களுக்கு அனுமதியில்லை.
4. நெல்லையப்பர் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றம்; நாளை மறுநாள் நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்ச்சி
நெல்லையப்பர் கோவிலில் தைப்பூச திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது.
5. பண்பொழி திருமலைக்குமாரசாமி கோவிலில் தைப்பூச திருவிழாவை ஆகம விதிகளின்படி நடத்த வேண்டும்; தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் பக்தர்கள் மனு
பண்பொழி திருமலைக்குமாரசாமி கோவிலில் தைப்பூச திருவிழாவை ஆகம விதிகளின்படி நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் பக்தர்கள் மனு கொடுத்தனர்.