தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் - தொல்லியல் துறையினர் கள ஆய்வு


தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் - தொல்லியல் துறையினர் கள ஆய்வு
x
தினத்தந்தி 22 Jan 2021 6:26 PM GMT (Updated: 22 Jan 2021 6:26 PM GMT)

கங்கை கொண்ட சோழபுரத்தில் மேற்கொள்ளப்படும் அகழ்வாராய்ச்சிப் பணிகளுக்கு இடம் தேர்வுக்கான முதற்கட்ட ஆய்வுப் பணிகளை தமிழக தொல்லியல் துறையினர் மேற்கொண்டனர்.

அரியலூர்,

தமிழகத்தில் நடப்பு ஆண்டிற்கான அகழ்வாராய்ச்சிப் பணிகள் தமிழகம் முழுவதும் கீழடி, ஆதிச்சநல்லூர், கங்கை கொண்ட சோழபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் தொடங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கங்கை கொண்ட சோழபுரம் மற்றும் அதன் சுற்றுப்புரங்களில் தமிழ்நாடு தொல்லியல் துறை மூலம் அகழாய்விற்கு இடம் தேர்வு செய்யும் பணிகள் தொடங்கின.

முதற்கட்டமாக கங்கை கொண்ட சோழபுரத்தை சுற்றுயுள்ள பொன்னேரி, மாளிகை மேடு உள்ளிட்ட பகுதிகளில் ஆளில்லா சிறிய ரக விமானத்தின் மூலம் மற்றும் தொழில்நுட்ப கருவிகள் கொண்டு ஒளிப்பதிவு செய்யப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

இது குறித்து தமிழக தொல்லியல் துறை இணை இயக்குனர் சிவானந்தம் அளித்த பேச்சியில், கங்கை கொண்ட சோழபுரம் மற்றும் மாளிகை வீட்டை சுற்றியுள்ள பகுதிகளில் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் திருவாரூர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர்களைக் கொண்டு கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அந்த ஆய்வறிக்கைகள் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று கூறினார்.

Next Story