மாநில செய்திகள்

கச்சத்தீவை தாரை வார்த்து கொடுக்கும்போது எங்களிடம் யாரும் கேட்கவில்லை - கனிமொழி எம்.பி + "||" + No one asked us when Kachchathivu was giving the word - Kanimozhi MP

கச்சத்தீவை தாரை வார்த்து கொடுக்கும்போது எங்களிடம் யாரும் கேட்கவில்லை - கனிமொழி எம்.பி

கச்சத்தீவை தாரை வார்த்து கொடுக்கும்போது எங்களிடம் யாரும் கேட்கவில்லை - கனிமொழி எம்.பி
கச்சத்தீவை தாரை வார்த்து கொடுக்கும்போது எங்களிடம் யாரும் கேட்கவில்லை என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம்,

தி.மு.க. மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் தி.மு.க. தேர்தல் பிரசார நிகழ்ச்சி ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூர், திருவாடானை ஆகிய 4 தொகுதிகளில் நடைபெறுகிறது. அங்கு தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. தீவிர சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். 

இன்று 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடியில் மீனவர்களைச் சந்தித்து அவர்களது பிரச்சினைக குறித்துக் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “திமுக ஆட்சியில், இறந்த மீனவர்களுடைய குழந்தைகளின் கல்விக்கான முழு செலவையும் ஏற்கும். கச்சத்தீவை தாரை வார்த்து கொடுக்கும்போது எங்களிடம் யாரும் கேட்கவில்லை” என்று தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து ராமேஸ்வரத்தில் முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் திரு.ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் இல்லத்திற்குச் சென்ற கனிமொழி, அவருக்கு அங்கு மரியாதை செலுத்தினார்.