நெல்லை நம்பியாறு நீர்த்தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறப்பு - முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு + "||" + Opening of water from Nellai Nambiyaru reservoir - Chief Minister Palanisamy order
நெல்லை நம்பியாறு நீர்த்தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறப்பு - முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு
நெல்லை நம்பியாறு நீர்த்தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,
இது குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
நெல்லை மாவட்டம், நம்பியாறு நீர்த்தேக்கத்தில் இருந்து, பிசான பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு விவசாயிகளிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. விவசாயிகளின் வேண்டுகோளினை ஏற்று, நம்பியாறு நீர்தேக்கத்தின் வலது மற்றும் இடது மதகுகளின் பிரதானக் கால்வாய்களின் கீழ் பாசனம் பெறும் நேரடி மற்றும் மறைமுகப் பாசனப் பகுதிகளுக்கு பிசான பருவ சாகுபடிக்கு 27.1.2021 முதல் 31.3.2021 வரை, நாள்தோறும் வினாடிக்கு 60 கன அடிக்கு மிகாமல், நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தினைப் பொறுத்து, தேவைக்கேற்ப, தண்ணீரை திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.
இதனால், திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை மற்றும் ராதாபுரம் வட்டங்களில் 1744.55 ஏக்கர் நேரடி மற்றும் மறைமுகப் பாசன நிலங்கள் பாசன வசதி பெறும். விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.