இந்தியாவில் குறைந்து கொண்டிருந்த கொரோனா தொற்று சற்று உயர்வு! + "||" + India reports 14,849 new #COVID19 cases, 15,948 discharges, and 155 deaths in last 24 hours, as per Union Health Ministry
இந்தியாவில் குறைந்து கொண்டிருந்த கொரோனா தொற்று சற்று உயர்வு!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,849 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனாவின் கொடூரம் சமீப காலமாக குறைந்து வருகிறது. தினமும் புதிதாக தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் தொடர்ந்து சரிந்து வருகிறது.
இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,849 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,54,533 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் இன்று ஒரே நாளில் 155 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,53,339 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் இன்று ஒரே நாளில் 15,948 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,03,16,786 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு 1,84,408 பேர் சிகிச்சை பெறுகின்றனர். மேலும் இந்தியா முழுவதும் 15,82,201 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 19 கோடியே 17 லட்சத்து 66 ஆயிரத்து 871 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன என்றும், அதில் நேற்று ஒருநாளில் மட்டும் 7,81,752 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.