மாநில செய்திகள்

கையில் வேலெடுத்து விட்டதால் ஸ்டாலினுக்கு வரமெல்லாம் கிடைக்காது - முதலமைச்சர் பழனிசாமி + "||" + Stalin will not get boon because he had a vel in his hand - Chief Minister Palanisamy

கையில் வேலெடுத்து விட்டதால் ஸ்டாலினுக்கு வரமெல்லாம் கிடைக்காது - முதலமைச்சர் பழனிசாமி

கையில் வேலெடுத்து விட்டதால் ஸ்டாலினுக்கு வரமெல்லாம் கிடைக்காது - முதலமைச்சர் பழனிசாமி
கையில் வேலெடுத்து விட்டதால் ஸ்டாலினுக்கு வரமெல்லாம் கிடைக்காது, தண்டனைதான் கிடைக்கும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கோவை,

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டன. அந்த வகையில் 'வெற்றிநடை போடும் தமிழகம்' என்ற பெயரில் அதிமுக சார்பில் முதலமைச்சர்  பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். 

இந்நிலையில் கோவை புலியங்குளத்தில் பிரச்சாரம் மேற்கொண்டபோது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கையில் வேல் ஏந்தியது குறித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “கடவுளை இழிவாக பேசியவர்கள் கையில் இன்று வேல் உள்ளது. ஸ்டாலின் தற்போது வேலை ஏந்திவிட்டதால் கடவுள் அவருக்கு வரம் அளிக்கமாட்டார். தேர்தல் மூலம் கடவுள் அவருக்கு தண்டனைதான் கொடுப்பார். அதிமுகவிற்குதான் கடவுள் வரம் கொடுப்பார். மக்களிடம் உண்மையை பேசினால், எதிர்க்கட்சி வரிசையிலாவது ஸ்டாலினுக்கு இடம் கிடைக்கும். பின்வாசல் வழியாக ஆட்சியை பிடிக்க ஸ்டாலின் முயற்சி செய்கிறார்” என்று கூறினார்.  

தொடர்புடைய செய்திகள்

1. இடஒதுக்கீடுக்காக தொடர்ந்து போராடும் தலைவர் ஸ்டாலின்: இந்துக்களில் ஒரு பிரிவினருக்கு மட்டும் பா.ஜனதா செயல்படுகிறது: கனிமொழி எம்.பி.
இடஒதுக்கீடுக்காக தொடர்ந்து போராடும் தலைவர் ஸ்டாலின் என்றும், இந்துக்களில் ஒரு பிரிவினருக்காக மட்டும் பா.ஜனதா செயல் படுகிறது என்றும் நாகர்கோவிலில் நடந்த கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசினார்.
2. “தி.மு.க. ஆட்சி அமைந்ததும் பட்டாசு தொழில் பிரச்சினைகளை ஸ்டாலின் தீர்த்து வைப்பார்”; கனிமொழி எம்.பி. பேச்சு
“தி.மு.க ஆட்சி அமைந்ததும் பட்டாசு தொழிலுக்கு ஏற்பட்டுள்ள அனைத்து பிரச்சினைகளையும் ஸ்டாலின் தீர்த்து வைப்பார்” என்று கனிமொழி எம்.பி. பேசினார்..
3. தடையை மீறி உண்ணாவிரத போராட்டம்; திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு
தடையை மீறி உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்ட திமுக தலைவர் மு.க ஸ்டாலின் உள்பட 2 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
4. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சந்திப்பு
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி நேரில் சந்தித்தார்.