‘தமிழ் கலாச்சாரம் இந்தியாவில் மேலோங்கியுள்ளது’ ஈரோட்டில் ராகுல்காந்தி பேச்சு


‘தமிழ் கலாச்சாரம் இந்தியாவில் மேலோங்கியுள்ளது’ ஈரோட்டில் ராகுல்காந்தி பேச்சு
x
தினத்தந்தி 24 Jan 2021 12:37 PM GMT (Updated: 24 Jan 2021 12:37 PM GMT)

தமிழ் கலாச்சாரம் இந்தியாவில் மேலோங்கியுள்ளது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

ஈரோடு:

தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி தமிழகத்தில் நேற்று முதல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

வணக்கம் தமிழகம் என்ற பெயரில் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய 4 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ராகுல்காந்தி பிரசாரம் செய்து வருகிறார். பிரசாரத்தின் முதல்நாளான நேற்று ராகுல்காந்தி கோவையில் பிரசாரம் மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையில், தமிழக சுற்றுப்பயணத்தின் 2-வது நாளான இன்று ராகுல்காந்தி ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அந்த மாவட்டத்தின் ஓடாநிலை பகுதியில் உள்ள நெசவாளர்களுடன் ஒன்றாக அமைர்ந்து ராகுல்காந்தி மதிய உணவு சாப்பிட்டார். அதன் பின்னர் பிரச்சார நிகழ்ச்சியில் பேசிய ராகுல்காந்தி:-

* தமிழர்களும், பெங்காலிகளும் ஒரு தாய் மக்களாக ஏன் இருக்க முடியாது?

* பன்மொழி கொண்ட இந்தியாவை ஏன் ஒரே மொழி ஆளவேண்டும்.

* தமிழ் கலாச்சாரம் இந்தியாவில் மேலோங்கியுள்ளது.

*இந்தியர்களின் ஒற்றுமைக்காக காங்கிரஸ் போராடி வருகிறது .

இவ்வாறு அவர் கூறினா.

இதனிடையே ஈரோடு மாவட்டம் ஓடாநிலையில், மக்கள் மத்தியில் ராகுல் காந்தி உரையாற்றிக் கொண்டிருந்த போது ராகுல் பேச்சை தமிழில் மொழிப்பெயர்த்த முகமது இம்ரான் (35) எனும் கல்லூரி பேராசிரியருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது.

இதனால் கூட்டத்தில் பரபரப்பு நிலவ, உடனடியாக ராகுல் காந்தியின் அறிவுறுத்தலின் பேரில், மயக்கமடைந்த இம்ரான் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

Next Story