மாநில செய்திகள்

இலங்கை கடற்பகுதியில் தமிழக மீனவர்கள் உயிரிழந்ததை கண்டித்து இன்று மதிமுக ஆர்ப்பாட்டம் + "||" + MDMK protest against the death of Tamil Nadu fishermen in Sri Lankan waters today

இலங்கை கடற்பகுதியில் தமிழக மீனவர்கள் உயிரிழந்ததை கண்டித்து இன்று மதிமுக ஆர்ப்பாட்டம்

இலங்கை கடற்பகுதியில் தமிழக மீனவர்கள் உயிரிழந்ததை கண்டித்து இன்று மதிமுக ஆர்ப்பாட்டம்
இலங்கை கடற்பகுதியில் தமிழக மீனவர்கள் உயிரிழந்ததை கண்டித்து இன்று மதிமுக ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.
சென்னை,

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் பகுதியில் இருந்து கடந்த 18-ந்தேதி ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த ஆரேக்கிய சேசு (வயது 50) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த மெர்சியா (30), நாகராஜ் (52), சாம்சன் (28), செந்தில்குமார் (32) ஆகிய 4 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அப்போது இலங்கை கடற்படையினர் தங்கள் கப்பல் மூலம், தமிழக மீனவர்களின் படகின் மீது மோதினர். இதில் நிலைதடுமாறிய மீனவர்கள் 4 பேரும் நடுக்கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.

இவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை முடிந்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகத்திற்கு வந்தது. இலங்கை கடற்படையினரின் இந்த வெறிச்செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் இலங்கை மற்றும் மத்திய அரசை கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்கிறார். 4 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கொன்றதாக குற்றம் சாட்டி காலை 11 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. பாதுகாப்பு துறையில் ‘இலங்கை, எங்களின் முதல் முன்னுரிமை கூட்டாளி’ இந்தியா சொல்கிறது
பாதுகாப்பு துறையில் இலங்கை எங்களின் முதல் முன்னுரிமை கூட்டாளி என்று இந்தியா கூறுகிறது.
2. இலங்கை, நேபாளத்திலும் ஆட்சியமைக்க பா.ஜனதா விரும்புகிறது; திரிபுரா முதல்-மந்திரி பேச்சால் சர்ச்சை
இந்திய மாநிலங்களில் மட்டுமல்ல இலங்கை, நேபாளத்திலும் ஆட்சியமைக்க பா.ஜனதா விரும்புகிறது என திரிபுரா முதல் மந்திரி பேசியுள்ளார்.
3. உருமாறிய கொரோனா தொற்று இலங்கையிலும் கண்டுபிடிப்பு
இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் இலங்கையிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
4. இலங்கையில் காதலர் தினம் கொண்டாட தடை - காவல்துறை எச்சரிக்கை
இலங்கையில் காதலர் தினம் கொண்டாட்டங்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
5. இலங்கையில் உள்ள 12 இந்திய மீனவர்களை விடுவிக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன - வெளியுறவு இணை அமைச்சர்
இலங்கையில் உள்ள 12 இந்திய மீனவர்களை விடுவிக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன என்று மாநிலங்களவையில் வெளியுறவு இணை அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.