மாநில செய்திகள்

9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு: முதல்வர் அறிவிப்பார் - அமைச்சர் செங்கோட்டையன் + "||" + Opening of schools for 9th and 11th class students: Chief Minister will announce - Minister Senkottayan

9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு: முதல்வர் அறிவிப்பார் - அமைச்சர் செங்கோட்டையன்

9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு: முதல்வர் அறிவிப்பார் - அமைச்சர் செங்கோட்டையன்
9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் அறிவிப்பார் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு, 

தமிழகத்தில் கொரோனா காரணமாக மூடப்பட்ட பள்ளிகள், 10 மாதங்களுக்குப் பிறகு கடந்த 19-ம் தேதி திறக்கப்பட்டன. பொதுத்தேர்வை எழுத உள்ள 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

வகுப்புக்கு 25 மாணவர்கள், கட்டாய முகக்கவசம், தெர்மல் ஸ்கேனர் மூலம் வெப்பநிலைப் பரிசோதனை உள்பட கொரோனா விதிமுறைகளைக் கடைப்பிடித்து பள்ளிகள் இயங்கி வருகின்றன.

இந்நிலையில் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் அறிவிப்பார் என்றும், சில பள்ளிகளில் கொரோனா தாக்கம் உள்ளதாக கூறப்படும் தகவல்கள் தவறானது. 2 ஆசிரியர்களுக்கு மட்டுமே கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது” என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.