அதிமுக கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு உரிமையில்லை: அமைச்சர் ஜெயக்குமார்


அதிமுக கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு உரிமையில்லை: அமைச்சர் ஜெயக்குமார்
x
தினத்தந்தி 31 Jan 2021 8:48 AM GMT (Updated: 2021-01-31T14:18:04+05:30)

அதிமுக கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு எந்த உரிமையும் கிடையாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை,

கொரோனா  தொற்று காரணமாக கடந்த ஜனவரி 20-ஆம் தேதி முதல் பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சசிகலா இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து  மருத்துவமனையில் இருந்து பெங்களூருவில் உள்ள சொகுசு விடுதிக்கு சென்றார். 

மருத்துவமனையில் இருந்து சசிகலா சென்ற காரின் முகப்பில் அதிமுக கொடி இடம்பெற்றிருந்தது  அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சசிகலா காரின் முகப்பில் அதிமுக கொடி இடம்பெற்றிருந்தது குறித்து, தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:  அதிமுக கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு எந்த உரிமையும் கிடையாது” என்றார். 


Next Story